ஏழைப் பங்காளன் எளிமையின் மறுபெயர்
ஏவுகணை நாயகன் ஏ.பி.ஜே
என்பவன்
விஞ்ஞானத்தின் வித்தவன் விமானி ஆனவன்
ராமேஸ்வரத்தின் வரமவன் பாரதத்தின் ரத்தினம்
ஏழையாய்ப் பிறந்தாலும் கோழையாய் வாழவில்லை
குடிமக்களுக்காக வாழ்ந்தக் குடியரசுத் தலைவன்
கல்விக் கற்றலை
செம்மை படுத்தியவன்
சாதி மதம் தாண்டி சமத்துவமானவன்
ஐஐடியில் இயற்பியல் பட்டமும் பெற்று
அணுசக்தி வளர்ச்சிக்கு அயராது உழைத்து
உலகம் போற்றும் மாபெரும் சக்தியாவான்
எழுத்தாளனாக பேச்சாளனாக உலகைக் கவர்ந்து
அறிவியல் தொழில் நுட்பத் துறைகளில்
நினைத்ததைச் சாதித்த நிறைவான மனிதன்
இந்தியா வல்லரசாவது இளைஞர்கள் கையில்
இருப்பதாகச் சொல்லி உத்வேகம் தந்தவன்
மேகாலயாவில் மேடைப் பேச்சின் மூச்சை விட்டவன்

வி.பிரபாவதி
மடிப்பாக்கம்
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?