வாழ்வு பெறும்

வாழ்வு பெறும்

 


மேகம் வானின் தட்டுகளோ- அது

கவிழ்ந்தால் மழையாய் கொட்டிடுமோ!

மேதினி மீதினில் பட்டிடுமோ- அதில் 

மேவும் நன்மைகள் கிட்டிடுமோ! 


ஏகும் பறவைகள் குரலெடுத்து 

ஏர்பிடி உழவர்கள் உழுது விட்டு

தாகம் எடுத்து குடிப்பனரோ-இனி 

தாக்கும் வெக்கையை அடிப்பனரோ!


சாகும்  உயிரினம் தனை காத்து  

சந்தம்  படிக்கிற குளிர் காத்து 

வாகாய் வளமதை தந்திடுமோ- இல்லை

வறட்சியினாலே வெந்திடுமோ?


ஈகும் மழையினை வான் மேகம்  

ஈன்றாள் தானே பசுமை பெறும்!

ஈங்கே மக்கள் மாடுகளும் -நல் 

ஈரத்தாலே  வாழ்வு பெறும்!

 

 மேகம் வானின்  தட்டுகளோ -அது 

கவிழ்ந்தால் மழையாய் கொட்டிடுமோ!

மேதினி மீதினில் பட்டிடுமோ- அதில் 

மேவும் நன்மைகள் கிட்டிடுமோ!?


 வெ.தமிழழகன் எம்ஏ.பிஎட்

சேலம்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%