
பெண்கள் கல்லூரியில் பி.ஏ; தமிழ் முதலாமாண்டு படிக்கும் காயத்ரி சோர்ந்து போய் வீட்டுக்கு வந்தாள்...
"காயு...என்னாச்சி..?ஏம்மா ரொம்ப வருத்தமா இருக்க..?"-அப்பா சுந்தரமணி கேட்டதும்..அடக்கி வச்சி இருந்த கண்ணீரை வெளியில் விட்டாள் மகள் காயத்ரி.
கண்ணீரை துடைத்து விட்டு மகளுடன் பரிவோடு பேசினார் சுந்தரமணி.
"காலேஜ்ல எனக்கு உதவிப் பணம் இல்லை'னு சொல்லிட்டாங்கப்பா...!"
"ஏம்மா..?"
"நான் மூணு வருசம் தனியார் ஸ்கூல்'ல படிச்சத்தினால..உதவித்தொகைப் பெற எனக்குத் தகுதி இல்லப்பா...!"-தேம்பி அழுதாள் காயத்ரி.
"அடப் பைத்தியக்காரப்
பெண்ணே..இதுக்குப் போயா இப்படி அழற...?சில விசயத்துக்கு அரசாங்கம் தகுதியை எதிர்பார்க்கும்..சில விசயத்துக்கு தகுதியை மீறி வாரி வழங்கும்..அம்மாவையும்,தம்பியையும் பத்திரமா பாத்துக்கம்மா..நான் கொஞ்சம் வெளியில போயிட்டு வர்ரேன்...!"-
கள்ளச்சாராயச்சாவு
எண்ணிக்கை சுந்தரமணியும் சேர்த்து 64ஆக உயர்ந்தது.உள்ளூர் அரசியல்வாதிகள் புடை சூழ வட்டாட்சியர் ரூ 10 லட்சத்திற்கான காசோலையை சுந்தரமணி வீட்டில் அவரது மனைவி கோகிலா..மகள் காயத்ரி
இருவரிடமும் நிவாரண உதவித்தொகையாக வழங்கிச் சென்றார்கள். காயத்ரி குற்ற உணர்வோடு நிலை குலைந்தாள்....!
கவிஞர்.இல.இரவி.செ.புதூர்
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?