உறவுகளைத் தேடி......

உறவுகளைத் தேடி......


துரைச்சாமி வாத்தியார் சாய்வு நாற்காலியில் அமர்ந்து இருந்தவர் மெது எழுந்தார் கைத்தடியை எடுத்துக் கொண்டு ஊன்றிய படி வாசல் வரை வந்தார் 

எவனும் சொல்ற நேரத்திற்கு வருவதில்லை என தனக்குத்தானே பேசிக் கொண்டே அந்த உள் வராண்டாவில் உலாவிக் கொண்டே அடுக்களை வாசல் வரை வந்து சமையல் செய்யும் துர்க்கா வை ஒரு பார்வை பார்த்துட்டு வாசல் வரை வந்து பார்த்தவர் சாய்வு நாற்காலியில் வந்து அமர்ந்து கொண்டார் துரைச்சாமி 

அவர் நடமாடி வருவதை கைத்தடி யின் டக் டக் சத்தத்தை வைத்து தெரிந்து கொள்வாள் துர்க்கா 

அய்யா...வாத்தியாரையா...

வாசலில் அழைக்கும் குரல் கேட்டு துர்க்கா அவரிடம் சைகையில் சொல்ல கார் வந்துருச்சா....என எழுந்து வாசலை நோக்கி வேகமாக நடந்தார் 

வாசலில் தோட்டக்காரன் இருப்பதை பார்த்து "முத்துவா..ஏம்பா உன்னை எத்தனை மணிக்கு வரச் சொன்னேன்

பேரப்பிள்ளைகள் வந்துருவாங்க சிக்கிரமா வான்னு "

தோட்டக்காரன் தான் கொண்டு வந்த இளநீரை வீட்டினுள் கொண்டு வந்து வைத்து விட்டு "நொங்கு கொண்டு வர்றேன்னு "அவரிடம் சொல்லிட்டு சென்றான் முத்து 

"கொஞ்சமாவது பொறுப்புணர்ச்சி இருக்கா எட்டு மணிக்குள்ள எல்லாம் கொண்டு வரனும்னு சொன்னேன் இளநீரையே பத்து மணிக்கு கொண்டு வர்றான் "

என்று சொல்லிக் கொண்டே "பழங்கள் எல்லாம் எப்போ வரப்போறான்னு தெரியலையே..."

புலம்பியவாறு சாய்வு நாற்காலியில் சாய்ந்தார் பள்ளிக்கூடம் விடுமுறை விட்டு மூனு நாளாச்சு, மகனுக்கும், மகளுக்கும், பொறுப்புணர்ச்சி இருக்கா,அப்பா பேரப்பிள்ளைகளை எதிர்ப்பார்த்திருப்பாரே,அக்கரை இருக்கா என புலம்பிக் கொண்டே கண்ணிமைகள் ஒன்றுடன் ஒன்று தழுவிக் கொண்டன 

வாசலில் கார் சத்தம் கேட்கவும் 

வேகமாக கைத்தடியை ஊன்றிக் கொண்டு வாசலுக்கு வந்தார் அப்போது கார் கதவை திறந்து கொண்டு "தாத்தா...."என ஓடி வந்தான் ராகுல் 

"வாங்க பேராண்டி வாங்க "என அவனை தூக்கி அணைத்துக் கொண்டார் 

"தாத்தா நல்லாயிருக்கியா" "நல்லா இருக்கேன்"

மகள் வருவதைப் பார்த்ததும்

"வாம்மா சிவரஞ்சனி மாப்பிள்ளை எங்கே?" 

"பின்னாடி வர்றாரு ப்பா"

"ரக்சனா தாத்தாவை பார்க்கலையா"

"வாங்க செல்லம்மா குட்டி வாங்க"என அழைக்க 

"தாத்தா அது ரக்சனா செல்லம்மா இல்லே"

என்று ராகுல் சொல்ல 

அப்போது வாசலில் கார் சத்தம் கேட்கவும் வாசல்பக்கத்தில் உள்ள கதவு பக்கத்தில் ஒழிந்து கொள்ள 

காரில் இருந்து இறங்கி வந்த ராஜா மெதுவா வீட்டிலும் நூழைந்தவன் கதவருகே நின்றிருந்த வரைப் பார்த்ததும் 

" அய்யா உன்னை கண்டு பிடிக்க முடியாதன்னு ஒழிஞ்சிருக்கியா..."ன்னு சொல்லிக்கொண்டே துரைச்சாமி வைத்திருந்த கைத்தடியை பிடிங்கி எறிந்தவன் அவர் பனியனை பிடித்து மேலே ஏறி அய்யா..."

என கட்டி அணைத்துக் கொண்டு முத்தம் கொடுத்தான் ராஜா

அப்போது மகனும் மருமகளும் வந்ததைப் பார்த்தவர் "நல்லா இருக்கியா... அம்மா அங்கே இருக்கா பாருன்னு சொல்லிக் கொண்டே பேரப்பிள்ளைகளிடம்

எல்லோரும் வாங்க உங்களுக்கு என்னென்ன வாங்கி வச்சுருக்கேன் பாருங்க" ன்னு 

தனி அறையை திறந்தார்

உள்ளே மாம்பழம், கொய்யாப்பழம்,

இளநீர்,வாழைப்பழம்,

சீத்தாப்பழம் என இருந்ததைப் பார்த்து எடுத்துக் கொள்ள

அம்மாவுடன் மகள் மகன் எல்லோரும் சேர்ந்து பேசி கொண்டிருந்தனர் 

என்னங்க ...என உறங்கிக் கொண்டிருந்தவரை தட்டி எழுப்பினாள் துர்க்கா 

விழித்தவர் சுற்றும் முற்றும் பார்த்தார் 

என்ன எனக் கேட்டார் 

"மக பேசுறா "ன்னு அலைபேசியை கொடுக்க 

அலோ....என்றார்

"அப்பா... சிவரஞ்சனி பேசுறேன்பா நீங்க நல்லா இருக்கீங்களா

அத்தே மாடிபடியில் இருந்து விழுந்துட்டாங்க அத்தைய ஆஸ்பத்திரிக்கு கொண்டு போயிருக்காருப்பா 

வந்ததும் பேசுறேன்பா "ன்னு சொல்லி அலைபேசியை கட் பண்ணினாள்.இந்தா போனு என்று

துர்க்காவிடம் கொடுத்தார் 

அப்போது அலைபேசி சத்தம் போட அலோ... என்றாள் துர்க்கா 

"அம்மா சிவராஜன் பேசுறேன் அவசர வேலையாக வெளியூர் போறேன் இப்போதைக்கு ஊருக்கு வர முடியாதுன்னு" சொல்லி வைத்தான் 

டே டே ன்னு கத்தினாள் துர்க்கா "கொஞ்சமாவது 

பந்தபாசம் இருக்கா 

அப்பா எப்படி இருக்காரு நீ எப்படி இருக்கேன்னு ஒரு வார்த்தை என்ன பிள்ளே இவன்" என அங்கலாயித்தபடி அவரிடம் வந்து சொல்ல 

வருடத்தில இரண்டு நாளோ மூனு நாளோ வந்து போறதுக்கு ரெம்ப சிரமம் பாரு என சொன்னவர் சோர்ந்து போனார் பேரப்பிள்ளைகள் வந்து வந்து போன நினைவாள் துடித்தார்  

"துர்க்கா இப்போ என்ன செய்யலாம்"

என அங்கும் இங்கும் கைத்தடியை வைத்து நடமாடியவர் 

துர்க்காவைப் பார்த்தார் 

"நாம போய் எல்லோரையும் பார்த்துட்டு வந்தா என்ன?"

என கேட்க 

"பார்த்துட்டு வர்றோம் கிளம்பு சிக்கிரம் உறவுகளைத் தேடி நாம போவோம் "துரைச்சாமி சொல்ல 

"முதல் சாப்பிடுங்க" என்றாள் துர்க்கா 

சாப்பாடா "அதெல்லாம் வேண்டாம்'என்றார் 

"பிள்ளைகள் வர்றாங்களேன்னு சமச்சது வீணா போயிடுமே"

"எதுக்கு வீணாப் போகுது எல்லாவற்றையும் பார்சல் பண்ணு அங்கே போய் சாப்பிடுவோம் "என்று

துரைச்சாமி துள்ளிக் கொண்டே துணிகளை எடுத்து துணிப்பையில் வைத்தார் துரைச்சாமி 



நல.ஞானபண்டிதன் 

திருப்புவனம் புதூர்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%