உலகக் கோப்பை ஹாக்கி: அனுமதி இலவசம் - டிக்கெட்டுகளை பெறுவது எப்படி?
Nov 27 2025
19
மதுரை மற்றும் சென்னையில் வரும் நவ., 28 முதல் டிச., 10 வரை நடைபெறும் ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பை போட்டிகளை காண பொதுமக்களுக்கு கட்டணமின்றி அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எனினும் டிக்கெட்டுகள் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளதால், http://ticketgenie.in இணையதளம் மூலம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துகொள்ளலாம். ஒரு நபர் தலா 4 டிக்கெட்டுகள் வரை எடுத்துக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் ஹாக்கி இந்தியா இணைந்து நடத்தும் 14 வது ஆடவர் ஹாக்கி ஜூனியர் உலகக்கோப்பைப் போட்டி, தமிழ்நாட்டில் நடைபெறவுள்ளது.
சென்னை மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டரங்கம் மற்றும் மதுரையில் அமைந்துள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் ஹாக்கி விளையாட்டரங்கங்களில் போட்டிகள் நடைபெறவுள்ளன.
இப்போட்டியைக் காண பொதுமக்களுக்கு கட்டணமின்றி அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், ஒரு நபர் 4 டிக்கெட்டுகளை மட்டுமே பெற முடியும். இதற்கான டிக்கெட்டுகளை http://ticketgenie.in இணையதளம் மூலம் முன்பதிவு செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?