கன்னியாகுமரியில் தொடர் மழை காரணமாக திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க 4 வது நாளாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மழையால் கன்னியாகுமரியிலுள்ள பேச்சிப்பாறை அணையில் இருந்து விநாடிக்கு 1,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, கன்னியாகுமரி உள்பட தென் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் முன்பே அறிவித்திருந்தது.
கன்னியாகுமரியில் பெய்து வரும் மழையால், மாவட்டத்திலுள்ள முக்கிய அணைகளான பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு ஆகியவற்றின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.
தொடர் மழை எச்சரிக்கையைத் தொடர்ந்து, மாவட்ட நிர்வாகம் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகளுக்கு 4 வது நாளாகத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?