உலகின் அபாயகரமான சாலைகள்

உலகின் அபாயகரமான சாலைகள்


*ஸ்கிப்பர்ஸ் கேன்யான் சாலை.!*


நியூசிலாந்து நாட்டின், ஸ்கிப்பர்ஸ் கேன்யான் சாலை உலகின் மிகவும் அபாயகரமான சாலைகளில் ஒன்று. செங்குத்தான மலையின் பக்கவாட்டில் தொங்கிச் செல்லும் இந்த சாலை, செங்குத்தான, அதேசமயம் பல ஆபத்தான வளைவுகளையும் கொண்டது. இந்த சாலையில் பயணிக்கும் ஒவ்வொரு நொடியும் மரணத்தை வழுக்கிச் செல்வதற்கு சமம்.


*குவாலியங் டனல் ரோடு.!*


சீனாவில் அமைந்திருக்கும் இந்த சாலை, செங்குத்தான மலைகளின் ஓரத்தில் சுரங்கச் சாலையாக செல்கிறது. இந்த சாலை முழுக்க அங்குள்ள கிராமத்தினரின் முயற்சியில் உருவாக்கப்பட்டிருக்கிறது. சில இடங்களில் சரிவாகவும், பக்கவாட்டில் தடுப்பு இல்லாமலும் செல்லும் இந்த சாலையில், வாகன ஓட்டிகள் தங்களின் மொத்த வித்தையையும் இறக்க வேண்டியிருக்கும்.


*லாஸ் கரகோல்ஸ் கணவாய்..!*


சிலி நாட்டில் அமைந்திருக்கும் மிகவும் அபாயகரமான சாலை இது. செங்குத்தான மலைகள் மற்றும் ஈரப்பதம் மிகுந்த சாலைகளில் வாகனத்தை வழுக்காமல் ஓட்டிச் சென்று கரை சேருவதே, ஓட்டுனர்களுக்கு மிகப்பெரிய சவாலாக அமைகிறது.


*ஸ்டெல்வியோ பாஸ்.!*


இத்தாலியின் மிக உயரமான கணவாய்களில் ஒன்றான ஸ்டெல்வியோவை இணைக்கும் சாலையும் வாகன ஓட்டிகளின் ஒட்டுமொத்த ஆற்றலையும் வெளிக்கொணரும் விதத்திலேயே இருக்கிறது. செங்குத்தானதாகவும், பல ஆபத்தான கொண்டை வளைவுகளுடன் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் இந்த சாலையில் விபத்துக்களின் எண்ணிக்கையும், மரணிப்பவரின் எண்ணிக்கையும் மிக அதிகமாக இருக்கிறது.


*காரகோரம் நெடுஞ்சாலை.!*


பாகிஸ்தான் நட்பு நெடுஞ்சாலை என்று செல்லமாக அழைக்கப்படும் காரகோரம் நெடுஞ்சாலை, வாகன ஓட்டுனர்களுக்கு நட்பாக மட்டும் இருக்காது என்பதை படத்தை பார்த்தே புரிந்து கொள்ளலாம். சீனாவையும், பாகிஸ்தானையும் இணைக்கும் இந்த சர்வதேச சாலை, காரகோரம் மலைத்தொடர் ஊடாக பயணிக்கிறது. மலைச்சரிவுகள், திடீர் வெள்ளப்பெருக்குகளும் கூடுதல் அபாயத்ததை வாகன ஓட்டிகளுக்கு தருகிறது.


*ஜேம்ஸ் டால்டன் ஹைவே.!*


அமெரிக்காவின், அலாஸ்கா பகுதியில் அமைந்திருக்கும் இந்த நெடுஞ்சாலை 667 கிமீ நீளம் கொண்டது. ஆபத்துக்கு கூட வழியில் எதுவும் எதிர்பார்க்க முடியாது. அந்த அளவு பகுதியின் ஊடாக செல்கிறது. அத்துடன், அலாதியாக வீசும் சூறைக்காற்றும் வாகன ஓட்டிகளுக்கு இந்த சாலை பெரும் சவாலானதாக இருக்கிறது.



அனுப்புதல்:

ப. கோபிபச்சமுத்து,

பாரதியார் நகர்,

கிருஷ்ணகிரி - 1

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%