
நெருப்பில்லாமலும்
புகைகிறதே
வானத்து வெண்மேகங்கள்
பூமியில் இறங்கிவந்து
மலைமுகடுகளில்
மார்க்கத்தை மறைத்து
ஆதவனை எதிர்த்துச்
செய்யும் மௌனபந்த்!
முள்ளில்லாமல்
சில்லென்று போடப்பட்ட
வெண்ணிற வேலிகளைத்தாண்ட
முடியாமல் வாகனங்கள்
தத்தளிக்கின்றன!
பட்டாளத்து
வீரர்களையே
நடுங்கச்செய்யும்
பனியின் முற்றுகை
வீறுநடைப்போட்டு வரும் ஆதவனைக்
கண்டதும் மறைந்து போகும் மாயமென்ன!
கவிஞர் த.அனந்தராமன்
துறையூர்
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%