
செய்தி அறிக்கை...
உலகில் உள்ள முதியோர்களை கொண்டாடுகின்ற விதமாக அக்டோபர் முதல் நாளன்று உலக முதியோர் நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக நெல்லை மாவட்ட முதியோர் ஆலோசனைக் குழு உறுப்பினர் கவிஞர் பே. இராஜேந்திரன் விடுத்திருக்கும் அறிக்கையாவது...
" உலகில் உள்ள முதியோர்களை மதிப்பதும்,அவர்களைக் காப்பதும் அவசியமானது என்பதை உணர்ந்த ஐக்கிய நாட்டு சபை 1990- ஆம் ஆண்டில் அக்டோபர் ஒன்றாம் நாளை உலக முதியோர் நாளாக அறிவித்தது.
அதன்படி 1991 -ஆம் ஆண்டு முதல் அக்டோபர் ஒன்றாம் நாள் உலக முதியோர் நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது .
முதியோர்களின் அறிவு, அனுபவம் ஆகியவற்றை உணர்ந்து .மதித்து இளைய சமுதாயத்தினரின் வழிகாட்டுதலுக்கு அவசியம் என்பதை எடுத்துச் சொல்லவும், முதியோர்கள் கௌரவமாகவும், சகல உரிமைகளோடும் அவர்கள் வாழ்வதற்கு வசதியை ஏற்படுத்திக் கொடுப்பதுமே இந்த நாளின் முக்கிய நோக்கமாகும்.
முதியோர்களுக்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் சமூக நலத் துறை மூலமாக சில திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது.அந்த திட்டங்கள் சரியாக இவர்களிடம் வந்து சேரவும், முதியோர்களை காத்திடுவது அவசியம் என்பதை உணர்த்தவும், அவர்களின் கௌரவமான வாழ்க்கைக்கு உறுதி செய்திடுவது அவசியம் எனவும் இந்த நாளில் அனைவரும் உறுதிகொள்வோம்."
...இவ்வாறு நெல்லை மாவட்ட முதியோர் ஆலோசனைக் குழு உறுப்பினர் கவிஞர் பே.இராஜேந்திரன் தெரிவித்திருக்கிறார்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?