பூத் கமிட்டி பயிற்சி முகாம்..,

பூத் கமிட்டி பயிற்சி முகாம்..,



கோவில்பட்டியில் நடைபெற்ற பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் பயிற்சி முகாமில் கலந்து கொண்டு முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ ஆலோசனைகள் வழங்கினார்.


தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நகர அதிமுக பூத் பாகம் முகவர்களுக்கான பயிற்சி முகாம் சௌபாக்கியா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி நகர செயலாளர் விஜயபாண்டியன் தலைமை வகித்தார். அதிமுக மேலிட பொறுப்பாளர்கள் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு நெல்லை மண்டல துணை செயலாளர் கருப்பசாமி பயிற்சியளித்தார்.

இந்த முகாமில் சிறப்பு அழைப்பாளராக அதிமுக தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ எம்எல்ஏ கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் அதிமுக மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் எம்.ஆர்.வி.கவியரசன், ஒன்றிய செயலாளர் போடுசாமி, அதிமுக நிர்வாகிகள் வெள்ளைச்சாமி, விஜயராஜ், வேல்ராஜ், வேல்முருகன், அண்ணாமலை, விக்னேஷ், கெங்காராஜ், சூரியா, சக்தீஸ்வரன், ராகுல், அம்பானி,ஆதி, ராஜரிஷி, பெமின் மற்றும் பூத் பாகம் முகவர்கள், வார்டு செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


ஆனந்த பாஸ்கர் செய்திகளுக்காக


கோவில்பட்டி செய்தியாளர் - ராஜ்குமார்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%