மணமேல்குடி குலச்சிறையார் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் மிஷன் இயற்கை என்ற திட்டம் தொடக்கம்*
Sep 30 2025
32

*குலச்சிறையார் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி தாளாளர் திரு. கார்த்தீஸ்வரன் அவர்களின் வேண்டு கோளுக்கிணங்க மிஷன் இயற்கை திட்டம் தொடங்கப்பட்டது. மரம் வளர்ப்போம், மழை பெறுவோம்! மண்வளம் காப்போம் என்ற குறிக்கோளை நிறைவேற்றும் விதத்தில் குலச்சிறையார் பள்ளி மற்றும் சாய்பாபா அறக்கட்டளை உதவியுடன் சனிக்கிழமை(27.09.25) அன்று அனைத்து மாணவர்களுக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. இதில் 100 மாணவ மாணவியர்கள் பெற்றோர்களுடன் வந்து மரக்கன்றுகளை வாங்கிச் சென்றனர். இந்நிகழ்வின்பொழுது பள்ளி முதல்வர் திருமதி மு. ஜனனி மாணிக்கராஜன் அவர்கள் மரங்களின் பயன்கள் பற்றியும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றியும் மாணவ மாணவியர்களுக்கு எடுத்துரைத்தார். இதில் மாணவ/ மாணவியர்கள் பசுமைப் படை ஒருங்கிணைப்பாளர் திருமதி. உமா மகேஸ்வரி, திருமதி வசந்தி, செல்வி அமீரா & செல்வி நர்மதா,பள்ளி ஆசிரியர்கள், மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். வீடுகளில் தங்கள் குழந்தைகள் மரம்கன்றுகளை நட்டு தண்ணீர் ஊற்றுவதை பெற்றோர்கள் மகிழ்ச்சியுடன் புகைப்படம் அனுப்பி தங்கள் பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.*
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?