உளுந்தூர்பேட்டை அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
Sep 25 2025
39

உளுந்தூர்பேட்டை அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது முகாமில் பல்வேறு அரசு துறைகள் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டன பொதுமக்களின் மனுக்கள் உடனடியாக பெற்றுக்கொள்ளப்பட்டு தீர்வு காணப்பட்டது தமிழ்நாடு மின் பகிர்மானம் கழகம் சார்பில் மின் சேவை அரங்கு அமைக்கப்பட்டது புதிய மின் இணைப்புகள், பெயர் மாற்றங்கள் உள்ளிட்ட சேவைகளுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டன விண்ணப்பித்த நுகர்வோருக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது இதன் மூலம் 10-க்கும் மேற்பட்ட நுகர்வோருக்கு பெயர் மாற்ற உத்தரவு வழங்கப்பட்டது இந்த உத்தரவுகளை உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் ஆ.ஜெ.மணிக்கண்ணன் வழங்கினார் நிகழ்வில் உதவி செயற்பொறியாளர் சிவராமன் அய்யம்பெருமாள் இளநிலை பொறியாளர் ராமச்சந்திரன் நகர் மன்ற தலைவர் திருநாவுக்கரசு துணை தலைவர் வைத்தியநாதன் வட்டாட்சியர் மணிமேகலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் நகர்மன்ற உறுப்பினர்கள் ராமலிங்கம், மாலதி, ரமேஷ்பாபு, செல்வகுமாரி ஆகியோரும் பங்கேற்றனர் ஏராளமான பொதுமக்களும் முகாமில் கலந்து கொண்டனர் முகாமில் விண்ணப்பித்தவுடன் பெயர் மாற்ற உத்தரவு வழங்கப்பட்டதை
பொதுமக்கள் பெரிதும் பாராட்டினர்
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?