ஏரெடுத்து, நிலமுழுது..
எருவெடுத்து தூவிவிட்டு
நீரெடுத்துப் பாய்ச்சிடவே நிறையுழைப்பு தோளாளன்.. வீறுநடைப் போடுகிறான் பாரிலே!
விடியல்வர போவதவன் வாழ்விலே!
கழனியெல்லாம் மழைபெய்து.. கால்தழுவி நின்றநீரில் கால் வைத்தான் நாம் சோற்றில் கை வைக்கவே..
உழவுத்தொழில் உயர்ந்திடவே..
உழைப்பாளன் நடைபயின்றான் பாரிலே..அவன் உள்ளிருந்து தோன்றுவது தானிங்கு விடியலே.!
நடவு நட்டு நாற்று நட்டு நாள்தோறும் பார்வையிட்டு.. படருகிற களைப்பறித்து வரப்புயர்த்தி.. அறுவடைக்கு கிளம்பிவிட்டான் பாரிலே! அவன் தந்த நெல்மணிகளுக்கு விலை வைத்தான் யாரடா இங்கு ஊரிலே?
கதிர்அரிவாள் கையெடுத்து களத்து மேட்டில் நின்றபடி.. காலமெல்லாம் பசிப்போக்க.. கால்வயிற்று கஞ்சியொடு நிலம் வாழும் உயிர்களுக்காய்ப் பாரிலே.. பயிர்வளர்த்தான் உழவனவன் உயிரளித்தான் வாழ்த்திடுவோம் நேரிலே.!
*வே.கல்யாண்குமார்.*
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?