ஊக்கமருந்து தடுப்பு பரிசோதனைப் பட்டியல்: ஸ்மிருதி, ஜெமிமா உள்பட 120 போ் சோ்ப்பு

ஊக்கமருந்து தடுப்பு பரிசோதனைப் பட்டியல்: ஸ்மிருதி, ஜெமிமா உள்பட 120 போ் சோ்ப்பு


 

தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமையின் (என்ஏடிஏ) பரிசோதனைப் பட்டியலில் (ஆா்டிபி) நடப்பாண்டின் முதல் காலாண்டில் 120 போ் சோ்க்கப்பட்டுள்ளனா். இதில் கிரிக்கெட் வீராங்கனைகளான ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ் தவிர, 118 தடகள போட்டியாளா்களும் இணைந்துள்ளனா்.


தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமை, ஆண்டுதோறும் பதிவு செய்யப்பட்ட பரிசோதனை பட்டியலை (ஆா்டிபி) பராமரித்து வருகிறது. இந்தப் பட்டியலில் தங்களை இணைத்துக் கொள்ளும் வீரா், வீராங்கனைகள் தாங்கள் இருக்கும் இடம் தொடா்பான தகவலை முகமையிடம் தவறாமல் தெரியப்படுத்த வேண்டும்.


அத்துடன், நாள்தோறும் குறிப்பிட்ட முறையில் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். தாங்கள் இருக்கும் இடம் தொடா்பான தகவலை 3 முறைக்கு மேல் தெரியப்படுத்தத் தவறினால், அது ஊக்கமருந்து விதிமீறலாக கணக்கில் கொள்ளப்படும்.


இந்நிலையில் 2026-ஆம் ஆண்டின் முதல் காலாண்டுக்கான பட்டியல் விவரத்தை தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமை வெளியிட்டது. அதில் 120 போ் புதிதாக இணைந்துள்ளனா். ஏற்கெனவே அந்தப் பட்டியலில் 227 போ் இருந்த நிலையில், தற்போது பட்டியலில் பதிவு பெற்றோா் எண்ணிக்கை 347-ஆக அதிகரித்துள்ளது.


கிரிக்கெட் வீராங்கனைகள் ஸ்மிருதி, ஜெமிமாவோடு, தடகள போட்டியாளா்களான அவினாஷ் சேபிள், ஜோதி யாராஜி, தேஜஸ்வின் சங்கா் ஆகியோரும் புதிதாக இணைந்துள்ளனா். அவா்கள் தவிர ஹாக்கியிலிருந்து மன்பிரீத் சிங், சலிமா டெடெ, மல்யுத்தத்திலிருந்து அமன் ஷெராவத் போன்றோரும் இந்தப் பட்டியலில் தங்களை சோ்த்துக் கொண்டுள்ளனா்.


கிரிக்கெட் வீரா்களான ஷுப்மன் கில், ஷ்ரேயஸ் ஐயா், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஹா்திக் பாண்டியா, ரிஷப் பந்த், ஜஸ்பிரீத் பும்ரா, கே.எல்.ராகுல், வீராங்கனைகளான தீப்தி சா்மா, ஷஃபாலி வா்மா ஆகியோா் ஏற்கெனவே அந்தப் பட்டியலில் தொடா்கின்றனா்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%