திருவண்ணாமலை ஜனவரி-6 சன்னதி தெருவில் அமைந்திருக்கும் அருள்மிகு ஸ்ரீ வல்லவ விநாயகருக்கு மார்கழி மாதம் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சுவாமிநாதன் குருக்கள் அவர்களால் அபிஷேகங்கள் பால், தயிர்,சந்தனம், இளநீர், தேன், பஞ்சாமிர்தம், வெட்டிவேர் வாசனை திரவியங்களால் அபிஷேகங்கள் வண்ணமலர் மாலைகளால் அருகம் புல் மாலைகளால் அலங்கரித்து, வேத மந்திரங்கள் ஒலிக்க, பிரசாதம், நெய்வேத்தியங்களுடன் மகா தீபாராதனையும் நடைபெற்றது. வெள்ளி கவசத்துடன் சிறப்பு அலங்காரத்தில் வல்லப விநாயகர் லட்சுமி அருள் பாலிக்கும் காட்சி. ஏராளமான பக்தர்கள் சங்கடஹர சதுர்த்தி பூஜையில் கலந்து கொண்டு வல்லப விநாயகரை வேண்டி அருள் பெற்றனர். அனைவருக்கும் பிரசாதங்களும் வழங்கப்பட்டது. தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?