கோவை செம்மொழிப் பூங்கா

கோவை செம்மொழிப் பூங்கா



கோவையில் அமைந்துள்ள செம்மொழி பூங்கா ஒரு அழகிய சுற்றுலா தலமாக விளங்குகிறது.

இந்த பூங்கா தமிழின் பெருமையை எடுத்துரைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

“செம்மொழி” எனப்படும் தமிழ் மொழியின் சிறப்பை உணர்த்தும் பெயர் இதற்கு சூட்டப்பட்டுள்ளது.

இயற்கை அழகும் மொழி பண்பாடு இணைந்த இடமாக இது திகழ்கிறது.

பூங்காவில் பலவகை மலர்ச்செடிகள் மற்றும் மரங்கள் காணப்படுகின்றன.

பசுமை சூழல் மனதிற்கு அமைதியை அளிக்கிறது.

மாணவர்கள் மற்றும் குடும்பத்தினர் அதிகம் வருகை தரும் இடமாக இது உள்ளது.

பூங்காவில் நடைபாதைகள் அழகாக அமைக்கப்பட்டுள்ளன.

காலை மற்றும் மாலை நேரங்களில் நடைப்பயிற்சி செய்ய ஏற்ற இடமாகும்.

சிறுவர்கள் விளையாடுவதற்கான வசதிகளும் உள்ளன.

தமிழ் இலக்கியம் மற்றும் பண்பாட்டை அறிமுகப்படுத்தும் அம்சங்கள் இதில் காணப்படுகின்றன.

சுத்தமான மற்றும் பராமரிக்கப்பட்ட சூழல் அனைவரையும் கவர்கிறது.

இயற்கையை பாதுகாக்கும் நோக்கில் இந்தப் பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது.

நகரின் சத்தத்திலிருந்து ஓய்வு பெற உதவும் இடமாக இது உள்ளது.

புகைப்படம் எடுக்க விரும்புவோருக்கு ஏற்ற இடமாகும்.

சுற்றுச்சூழல் விழிப்புணர்வை வளர்க்கும் வகையில் பூங்கா செயல்படுகிறது.

மாணவர்களுக்கு கல்வி பயனுள்ள தகவல்களையும் வழங்குகிறது.

தமிழ் மொழியின் பெருமையை நினைவூட்டும் அடையாளமாக இது விளங்குகிறது.

கோவை மக்களின் பெருமைக்குரிய இடங்களில் ஒன்றாகும்.

செம்மொழி பூங்கா இயற்கை மற்றும் பண்பாட்டின் சங்கமமாக திகழ்கிறது. பூங்காவைச் சுற்றிப் பார்க்க முடியாத நிலையில் உள்ள குழந்தைகள், சிறுவர்கள் மற்றும் வயதான ஆண், பெண்கள் செல்ல வசதியாக 10 நபர்கள் உட்கார்ந்துகொண்டு பார்த்துச் செல்லும் வகையில் வாகனங்கள் வசதி உள்ளது. காலை 6.00 மணி முதல் 7.00 மணி வரை பூங்கா திறந்திருக்கும். பழங்கால கடையெழு வள்ளல்கள் பாரி,

காரி, ஓரி, பேகன், ஆய், அதியமான், நள்ளி போன்றவர்களின் சிலைகள் அற்புதமாக வடிவமைக்கப்பட்டு நிறுவப்பட்டுள்ளன. மிகப் பிரம்மாண்டமாக எண்ணிமம் நூலகமும் கட்டப்பட்டு முடிவுறும் தறுவாயில் உள்ளது. ஆங்காங்கே செயற்கை முறை நீர்வீழ்ச்சி அமைக்கப்பட்டுள்ளன. மான், யானை, பட்டாம்பூச்சி வடிவ சிலைகள் அற்புதமாக அமைந்துள்ளன. இரவில் பார்க்கும்போது மிக அழகாகக் காட்சி அளிக்கின்றன. ஆங்காங்கே உட்காருவதற்கான இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.நடைப்பயிற்சிக்காக மாதக் கட்டணம் செலுத்தி நாள்தோறும் பயிற்சி மேற்கொள்ளலாம். மிக நேர்த்தியான முறையில் அதிநவீன ஓய்வு (கழிப்பிடம்) மற்றும் அலங்கார அறை வசதி உள்ளது. நாள் தோறும் ஏராளமான பார்வையாளர்கள் பார்வையிட்டுச் செல்கிறார்கள். வாகனங்கள் நிறுத்தவும் இடவசதி செய்யப்பட்டுள்ளது. நாங்கள் குடும்பத்துடன் கண்டு களித்தோம்.


உ.மு.ந.ராசன்கலாமணி

கோவை.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%