ஊர் உறங்கும் அந்த அமைதி இரவுக்காக காத்திருக்கிறேன்....
அந்த இரவில் தான் என் க(வி)தைகள் எழுத்துருவில் வெள்ளை காகிதத்தில் இடம் பெறும் நேரம்....
பகலில் நான் சந்தித்த நிஜ கதாபாத்திரங்களை
க(வி )தை வடிவில் படைக்க இரவே உகந்த நேரம்...
மதுபோதைக்கு அடிமையானவன்
அந்தி சாய்ந்ததும்...
சரக்கோடும், தொட்டுக் கொள்ள
ஊறுகாயும் தேடுவது போல் தான் நானும் இரவின் நிசப்தத்தில் பேனாவும் பேப்பரும்
தேடுகின்றேன்...
போதைக்கு அடிமையானவன் மீள்வது எப்படி கடினமோ...
அது போலத்தான்
எழுத்துக்கு அடிமையானவன் நிலையும் !
தனக்கு தெரிந்ததை கிறுக்கல்களாய்
படைப்பதில் அவனும் அடிமையாய் போகிறான்....
என்னைப் போல !

எம்.பி.தினேஷ்.
கோவை - 25
_________________
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?