கை வீசம்மா.. கை வீசு.!
கருணையோடே கைவீசு
பொய் பேசும் உலகத்திலே..
புரட்சிப் பூவே கை வீசு.!
கள்ளிப் பாலில் தப்பித்தே..
கண்ணே.. பிறந்தாய் கைவீசு.!
பள்ளிக்கூடம் போவதற்கே..
படித்தே உயரக் கைவீசு.!
ஆணாதிக்க பூமியிலே
ஆழிப்புயலே.. கைவீசு.!
தன்னை உணர்ந்து தலைநிமிர்ந்து.. தாவிக் குதித்துக் கை வீசு.!
இன்னும் இன்னும் இவ்வுலகில்.. எழுந்து நடந்து.. கைவீசு.! பெண்ணின் பெருமை நானென்று பேரிடி முழங்கக் கைவீசு.!
மானாய் குயிலாய் மணிப்புறாவாய்..
ஊரார் நினைத்தார் கைவீசு! யானோர் பாயும் புலியென்று.. புறநானூறே கைவீசு.!
கட்டில் தொட்டில் பதுமையல்ல.. கனலே நான் என்று கைவீசு!
கட்டுகள் உடைத்தே கைவீசு.! கண்ணே.. மணியே.. கைவீசு.!
*வே.கல்யாண்குமார்.*
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?