ஊழலுக்கு எதிரான விழிப்புணர்வு: ஐ.ஓ.பி. வங்கி அதிகாரிகள் பேரணி

ஊழலுக்கு எதிரான விழிப்புணர்வு: ஐ.ஓ.பி. வங்கி அதிகாரிகள் பேரணி



சென்னை, அக்.28–


இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (ஐ.ஓ.பி.) தற்போது செயல்படுத்தி வரும் கண்காணிப்பு விழிப்புணர்வுபரப்புரை திட்டத்தின் ஒரு பகுதியாக, பொது வாழ்வில் நேர்மை மற்றும் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தும் நோக்கில், பெசன்ட் நகர் கடற்கரையில் ஒரு மாபெரும் நடைப்பயணத்தை (வாக்கத்தான்) ஏற்பாடு செய்து நடத்தியது.


நவம்பர் 2 வரை "கண்காணிப்பு; நமது கூட்டுப் பொறுப்பு" என்ற கருப்பொருளில் நடைபெறவுள்ள மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் நாடு தழுவிய கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம்–2025- நிகழ்வின் ஒரு அங்கமாக இந்த முன்னெடுப்பை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேற்கொண்டது.


இந்த நடைப்பயணத்தில், செயல் இயக்குநர் ஜாய்தீப் தத்தா ராய், செயல் இயக்குநர் டி.தனராஜ், மற்றும் முதன்மை கண்காணிப்பு அதிகாரி ராஜீவ் குமார் ஆகியோருடன், இவ்வங்கியின்மத்திய அலுவலகம் மற்றும் சென்னை மண்டல அலுவலகங்களின் பொது மேலாளர்கள், உயர் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.


ஊழலை தடுப்பதற்கான கண்காணிப்பு என்பது அனைவரின் கூட்டுப் பொறுப்பு என்பதைப் பற்றி பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், ஊழலற்ற சமுதாயத்தை ஊக்குவிப்பதும் இந்த நிகழ்வின் முக்கிய நோக்கமாக இருந்தது.


ஜாய்தீப் தத்தா ராய் பேசுகையில், "ஊழலை தடுப்பதற்கான கண்காணிப்பு என்பது, ஒரு சில தனிநபர்கள் அல்லது அதற்கான அமைப்புகளின் பொறுப்பு மட்டுமல்ல; அது, சமூகத்தின் அங்கமான அனைத்து தனிநபர்கள் மற்றும் அமைப்புகளின்கூட்டுப் பொறுப்புஎன்பதை" வலியுறுத்தினார்.


வங்கியின் செயல் இயக்குநர் டி.தனராஜ், வங்கியின் செயல்பாடுகளில் நேர்மையான சூழலை உருவாக்கி பாதுகாப்பதில் வங்கியின் அர்ப்பணிப்பை வலியுறுத்தினார்.


ராஜீவ் குமார் பேசுகையில், “பொது நிர்வாகத்தில் நன்னெறிகள், வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மையை நிலைநிறுத்துவதற்கானமத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் முயற்சிகளுக்கு கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் உத்வேகமளிக்கும் ஒரு வலிமையான தளமாக விளங்குகிறது” என்று குறிப்பிட்டார்.


அனைத்து பணியாளர்களும் நேர்மையை கடைபிடிப்பதற்காக உறுதிமொழி ஏற்கும் நிகழ்வும் நடந்தது. ஒரு வார நிகழ்ச்சியில் கூடுதலாக, கோலப் போட்டி, வினாடி வினா, கட்டுரைப் போட்டி மற்றும் ஊழலுக்கு எதிரானகண்காணிப்பு குறித்த சிறப்பு உரைகள் போன்ற நிகழ்வுகள் நடைபெற உள்ளன. வங்கியின் பணியாளர்களை ஊக்குவிக்கவும், ஊழல் தடுப்பிற்கான கண்காணிப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வை வழங்கவும் இவை உதவும்.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%