வெளிநாட்டவர்கள் அமெரிக்கா வந்து செல்ல புது வழிகாட்டு முறைகள் வெளியீடு

வெளிநாட்டவர்கள் அமெரிக்கா வந்து செல்ல புது வழிகாட்டு முறைகள் வெளியீடு


 


வாஷிங்டன்: வெளிநாட்டவர்கள் மற்றும் க்ரீன் கார்டு உள்ளவர்கள் அமெரிக்கா வந்து, செல்வதற்கு புதிய வழிகாட்டு முறைகளை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இது வரும் டிச.,26 முதல் அமலுக்கு வருகிறது.


அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்றது முதல் வெளிநாட்டவர்கள் விவகாரத்தில் பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், தற்போது மேலும் ஒரு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதாவது, வெளிநாட்டவர்கள் மற்றும் க்ரீன் கார்டு உள்ளவர்கள் அமெரிக்கா வந்து, செல்வதற்கு புதிய வழிகாட்டு முறைகளை அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத்துறை அறிவித்துள்ளது.


 வெளிநாட்டவர்கள் மற்றும் க்ரீன் கார்டு உள்ளவர்கள் அமெரிக்காவுக்கு வரும் போதும், செல்லும் போதும், புகைப்படங்கள் மற்றும் கைரேகை விபரங்களை சமர்ப்பிக்க வேண்டும். அமெரிக்காவில் உள்ள முக்கிய விமான நிலையங்களில் மட்டும் இந்த முறை நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது அனைத்து விமான நிலையங்கள், துறைமுகங்கள் மற்றும் எல்லைகளில் இது விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இது வரும் டிச.,26 முதல் அமலுக்கு வருகிறது.


முன்பு 14 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் 79 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு இந்த நடைமுறையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அனைவருக்கும் இது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.


இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், 'போலி ஆவணங்கள் மூலம் அமெரிக்காவுக்கு வந்து செல்வது தடுக்கப்படும். அதேபோல, இந்த நடவடிக்கையின் மூலம் எல்லை பாதுகாப்பை பலப்படுத்தப்படுவதோடு, ஆள்மாறாட்டம் மற்றும் விசா காலம் முடிவடைந்தும் சட்டவிரோதமாக தங்கியிருப்பதை தடுக்க முடியும்,' என்றனர்.



மீண்டும் காட்டாட்சிக்கு உலகம் திரும்பிச் செல்வதா: டிரம்புக்கு சீனா சூடு

 

கோலாலம்பூர்: மலேசியாவில் நடைபெற்ற ஆசியான் உச்சி மாநாட்டில், சீனப் பிரதமர் லி கியாங் பேசும்போது அமெரிக்காவின் வரி விதிப்பு முறைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். உலகம் மீண்டும் காட்டாட்சி முறைக்கு செல்லக்கூடாது என்று அவர் கூறினார்.


வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக, அமெரிக்க அதிபர் டிரம்ப்- சீன அதிபர் இடையே மோதல் தொடர்ந்து நீடித்து வருகிறது. அமெரிக்காவுக்கு பதிலடி தரும் விதமாக அரிய வகை கனிமங்களை ஏற்றுமதி செய்வதில் சீனா கட்டுப்பாடு விதித்தது.


இதையடுத்து நவ., 1ம் தேதி முதல் அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் அனைத்து சீன பொருட்களுக்கும், 100 சதவீதம் கூடுதல் வரி விதிப்பதாக அறிவித்தார். இந்த வரி விதிப்பு நிரந்தரமானது அல்ல என்றும் அடிக்கடி கூறுகிறார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%