எங்களுக்கு எதிராக மீண்டும் போரிட வாருங்கள்’பாகிஸ்தான் ராணுவ மந்திரி அடாவடி
Oct 07 2025
104
இஸ்லாமாபாத்,
காஷ்மீரின் பஹல்காமை குறிவைத்து பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு எதிராக மே 7-ந் தேதி இந்தியாவின் முப்படைகள் இணைந்து ஆபரேஷன் சிந்தூரை நடத்தின. பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இதனை தொடர்ந்து இந்திய-பாகிஸ்தான் ராணுவத்தினர் பரஸ்பரம் தீவிர தாக்குதலில் ஈடுபட்டனர். 4 நாட்களுக்கு பிறகு இருநாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தி தாக்குதல் நடவடிக்கையை முடிவுக்கு கொண்டு வந்தனர். பாகிஸ்தான் ராணுவ மந்திரி கவாஜா ஆசிப் நேற்று இந்தியாவுக்கு பதிலளிக்கும் விதமாக தனது வலைத்தள பதிவில் கூறி இருப்பதாவது:-
“இந்திய ராணுவம் மற்றும் அரசியல் தலைவர்களின் சமீபத்திய பேச்சுகள், மே மாத (சிந்தூர் தாக்குதல்) தோல்வியில் இழந்த அவர்களின் கறைபடிந்த நம்பகத்தன்மையை மீட்டெடுக்கும் தோல்வியுற்ற முயற்சியாகும். 0-6 மதிப்பெண்ணுக்கு கீழ் பெற்ற இத்தகைய மோசமான தோல்விக்கு பிறகும், ஒருவேளை மீண்டும் முயற்சித்தால் கடவுள் விரும்பினால் முந்தைய மதிப்பெண்ணைவிட கூடுதல் மதிப்பெண் பெறலாம். எங்களுடன் மீண்டும் போரிட வாருங்கள். அப்போது இந்தியா அதன் போர் விமான இடிபாடுகளின் கீழ் புதைக்கப்படும்” என்று அடாவடியாக பேசியுள்ளார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?