எங்கிட்ட மோதாதே...

எங்கிட்ட மோதாதே...



 70 வயது பெரியவர் ஒருவர் 


இரயில் பெட்டியில் அமர்ந்திருக்கிறார்.


 கூட்டமே இல்லை.


 ரயில் புறப்படும் சமயம் 10 இளைஞர்கள் வந்து....


 அதே பெட்டியில் ஏறுகிறார்கள்.


 இரயில் புறப்படுகிறது. 


 இளைஞர்கள் என்பதால் வயதுக்கேற்ற குறும்பு கூத்தாடுகிறது. 


 ஒரு இளைஞன் "அபாயச் சங்கலியை இழுக்கலாமா?"

 என்கிறான் 


 இன்னொருவன் அங்கே உள்ள அறிவிப்பு பலகையை பார் .


சங்கிலியை இழுத்தால் 500 ரூபாய் அபராதம் என்று போட்டு இருக்கிறது. 


 பேசாம வாடா என்கிறான் 


 அடுத்து இன்னொருவன் நாம்தான் இத்தனை பேர் இருக்கிறோமே ...


எல்லோருமாக ஆளுக்குக் கொஞ்சம் பணத்தைப் போட்டால்....


 அபராதத்தை கட்டிவிடலாம் என்கிறான். 


 உடனே வசூல் ஆரம்பமானது.


 பிறகு எண்ணிப் பார்க்கிறார்கள் .

 

 மூன்று 200 ரூபாய் நோட்டுகள் 


 ஆறு 100 ரூபாய் நோட்டுகள் 


 இரண்டு 50 ரூபாய் நோட்டுகள்  


 ஆக மொத்தம் ஆயிரத்து முன்னூறு ரூபாய் 


வசூல் ஆனதாகப் பேசிக் கொள்ளுகிறார்கள் .


 அந்தப் பணத்தை முதலில் யோசனை சொன்னவனிடம் கொடுக்க


 அவனும் தனது பாக்கெட்டில் வைத்துக் கொள்ளுகிறான் .


 அப்பொழுது ஒருவன் சொல்லுகிறான் 


 சங்கிலிய புடிச்சு இழுப்போம். 


 கேட்டாங்கன்னா....


 நாங்க இழுக்கல 


அதோ ...

அந்தப் பெருசுதான் இழுத்தாருன்னு...


  சொல்லிவிடுவோம் .


 அபராதத்த அவரு கட்டட்டும் .


 நமக்கு பணமும் மிச்சம் என்கிறான் 


 இதைக் கேட்டு பதறிய பெரியவர்....


 ஏப்பா.... என்னை வம்புல மாட்டி விடுறீங்க? என்று பரிதாபமாக கேட்கிறார் .


 இளமையின் காதில் இதெல்லாம் ஏறுமா ?


 ஒருவன் சங்கிலியை பிடித்து இழுத்தான் .


 ஓடி கொண்டிருந்த ரயில் ஓய்ந்து போய் நிற்கிறது .


 போலீஸ்காரர் சகிதமாக டி.டி.ஆர் அங்கு வருகிறார் .


 யார் சங்கிலியை பிடித்து இழுத்தது? என்று கேட்டபோது  


 இளைஞர்கள் 10 பேரும் ஒரே குரலில் 


அதோ அந்த பெரியவர் தான் ....


நாங்கள் சொல்லியும் கேட்காமல்....


 இழுத்து விட்டார் என்று அபாண்டமாக பழி போடுகிறார்கள். 


போலீஸ்காரர் அந்த பெரியவரைப் பார்த்து 


நீங்கஏன் இப்படி செய்தீர்கள் என்று கேட்க... 


 ஐயா! நான்


 200 ரூபாய் நோட்டுகளில் மூன்றும் 


 100 ரூபாய் நோட்டுகளில் ஆறும்


 50 ரூபாய் நோட்டுகளில் இரண்டும் 


ஆக 1300 ரூபாய் பணம் வைத்திருந்தேன் .


 அதை இந்த இளைஞர்கள் பறித்துக் கொண்டார்கள் 


எனவேதான் சங்கிலியை இழுத்தேன்.


 அதோ....அந்தப் பையனின் பாக்கெட்டில் தான் 


அந்தப் பணம் இருக்கிறது என்று 


பணம் இருந்த பையனை நோக்கி சுட்டிக் காட்டுகிறார். 


 போலீஸ் கான்ஸ்டபிள் பையனை பரிசோதிக்க 


அவனுடைய பாக்கெட்டில் 1300 ரூபாய் பெரியவர் சொன்னவாறு இருந்தது .


 ஏன்டா இரயிலிலேயே அடித்து புடுங்கி ரீங்களா என்று அதட்டியவாறு 


 அவர்களிடமிருந்த பணத்தை பெரியவரிடம் ஒப்படைத்து விட்டு 


அவர்களை இழுத்துச் சென்றார்கள் 


 ஆப்புக்கு நடுவே மாட்டிய குரங்கை போல பெரியவரை பார்த்து


 முறைத்துக் கொண்டே போனார்கள்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%