
வி.கே.லக்ஷ்மிநாராயணன்
22,22 ஏ, ராமகிருஷ்ணா நகர் மெயின் ரோடு
போருர், சென்னை 600 116
ராகினியைத் திருமணம் புரிந்து ஒரு வாரம் கூட ஆகவில்லை. அவளைப் பற்றிய
ரகசியம் ஒன்றை கேள்விப்பட்ட மாதவன் சினம் கொண்டான். தனக்குத் தெரியா
மல் போனது ஆத்திரத்தையும் ஏற்படுத்தியது.
தனியாக அம்மாவை அழைத்துச் சென்ற மாதவன், " அம்மா, ராகினி அவங்களுக்கு
பிறந்தவள் இல்லையாமே ! தத்தெடுத்து வளர்க்கப்பட்டவள்னு கேள்விப்பட்டேன். உண்மையா ?"
மகன் பட்டென்று போட்டு உடைத்த ரகசியத்தால் சற்று தடுமாறிப் போன சாரதா, " ஆமாம். ஆனாலும் பெற்ற மகளைப் போல சீராட்டி, பாராட்டி வளர்க்கப் பட்டவள் ராகினி. நல்ல பண்பும், ஒழுக்கமும் உடையவள். பார்க்க பாந்தமாக, அடக்க ஒடுக்க மாக இருக்குறது உனக்கே தெரியும்…"
" அதெல்லாம் சரிதான். அவள் யாருக்குப் பிறந்தவள், பிறந்த தேதி, நேரம் என்ன; நாள் நட்சத்திரம், ராசி இதெல்லாம் என்னன்னு தெரியுமா ? இப்படி அட்ரஸே இல்லாத
ஒரு அநாதைப் பெண்ணை எனக்கு கட்டி வச்சிட்டீங்களே !"
உள்ளக் குமுறலுடன் பேசிய மகன் அருகில் சென்றாள் சாரதா. "இதோ பார் மாதவா, குழந்தைக் காப்பகத்தில் ராகினியைச் சேர்க்கும்போது எல்லா விவரங்களும் எழுதப்பட்ட பேப்பர் ஒண்ணு கூட இருந்ததாம். காப்பாளர் அதை வச்சிக்கிட்டு ஜாதகம் கணிச்சிருக்கார்…"
" சரி, எனக்கு ஏன் தெரிவிக்கல்லை ?"
" மாதவா, இது ஒண்ணும் பெரிய விஷயமில்லேன்னு எங்களுக்குப் பட்டது. அதோடு
பெற்ற பெண்ணைக் காட்டிலும் ஒரு படி மேலாக ராகினியை நன்றாக வளர்த்திருக்
கிறார்கள். கல்யாணத்தையும் ஜாம் ஜாமுன்னு நடத்தியிருக்கிறார்கள். இதை விட
வேறு என்ன வேண்டும் ?...மேலும் நம்மை நம்பி வந்து விட்டாள். தயவுசெய்து நீ
பிரச்னை எதுவும் பண்ணாமல் இருக்கறதுதான் நல்லது !"
சாரதா அருகில் சென்றான். தீர்க்கமாய் பார்த்தான். சாரதாவும் சற்று பயம் தேங்கிய
விழிகளுடன் மகனை நோக்கினாள். ஒரு சில வினாடிகள் பார்த்து விட்டு அந்த
இடத்தை விட்டு அகன்றான் மாதவன்.
அவன் போவதையே விழிகள் நனைய பார்த்துக் கொண்டிருந்த சாரதா, ' ஹூம் ! நல்ல வேளை, நீ யும் தத்துப் பிள்ளைதான்; எங்களுக்குப் பிறந்தவன் இல்லை என்கிற ரகசியம் உனக்குத் தெரியாமலிருக்கே ! அதுவரை ஷேமம்தான் !' என்று மனதில் நினைத்துக் கொண்டவள் நிம்மதி பெருமூச்சொன்று விட்டாள்.
……………………………………………..
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?