எடப்பாடி பழனிசாமி இனி, முகமூடியார் டிடிவி தினகரன் கிண்டல்

எடப்பாடி பழனிசாமி இனி, முகமூடியார் டிடிவி தினகரன் கிண்டல்


சென்னை, செப். 18-

டெல்லியில் முகத்தை மூடிக்கொண்டு காரில் ஏறிய பழனிசாமி, இனி முகமூடி பழனிசாமி என

அழைக்கப்படுவார் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறினார்.

 டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துவிட்டு காரில் ஏறியபோது, பழனிசாமி முகத்தை மூடிக்கொண்டு செல்வது போன்ற காணொலி இணையத்தில் வைரல் ஆனது. இது தொடர்பாக அமமுக பொதுச் செயலாளர் தினகரன் நேற்று அளித்த பேட்டி-

வானிலை காரணமாக தனது சுற்றுப்பயணத்தை தள்ளிவைப்பதாக கூறிவிட்டு டெல்லிக்குச் சென்று உள்துறை அமைச்ச ரை சந்தித்துள்ளார். ஆனால், பொய் கூறி விட்டுச் செல்வது ஏன்?. தமிழக மக்களையும் பிற அரசியல் கட்சியினரையும் இனிமேலும் பழனிசாமி ஏமாற்ற முடியாது. கூட்ட ணிக் கட்சித் தலைவரை டெல்லியில் சந்தித்துவிட்டு , முகத்தை மூடிக் கொண்டு தலைவர் ஒருவர் வருவதை வரலாற்றில் யாரும் பார்த்தது இல்லை.  

அமித் ஷாவை சந்தித்த பிறகு மற்ற அதிமுக நிர்வாகிகளை அனுப்பிவிட்டு , சிறிது நேரத்துக்கு பிறகு தனது மகனுடன் பழனிசாமி வெளியேறியுள்ளார். முகத்தை இருவரும் மூடிக் கொண்டது சென்றது ஏன்? என அவர் தான் சொல்ல வேண்டும். வருகின்ற தேர்தலில் எத்தனை கட்சிகளுடன் கூட்டணி வைத்தாலும் எடப்பாடி பழனிசாமி தோல்வியை சந்திப்பது உறுதி.

எடப்பாடி பழனிசாமியை ஆட்சியில் அமர வைத்த எங்களுக்கும், ஆட்சி தொடர உதவிய ஓபிஎஸ்-க்கும், ஆட்சியைக் காப்பாற்றி கொடுத்த பாஜகவுக்கும் உள்ளிட்ட அனைவருக்கும் துரோகம் செய்த எடப்பாடி பழனிசாமி 2026 சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு உண்மையாகவே நடுரோட்டில் நிற்கப் போகிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%