உச்சநடிகராக இருந்தபோது எனக்கும் தான் கூட்டம்வந்தது சரத்குமார் சொல்கிறார்
Sep 17 2025
42

சென்னை, செப். 18-
உச்சநடிகராகத் தான் அரசியலுக்கு வந்தேன். பிரபலம் என்பதால் எனக்கும் கூட்டம் கூடியது. கொள்கைகள் மக்களை ஈர்த்தால் தான் ஆட்சியை கைப்பற்ற முடியும் என்று நடிகரும், பாஜக நிர்வாகியுமான சரத்குமார் கூறினார்.
சென்னையில் நடிகர் சரத்குமார் நேற்று பேட்டி அளித்தார். அவரிடம் விஜய் அரசியல் பற்றி கேட்கப்பட்டது.அதற்கு அவர் கூறியதாவது-
கொள்கை , கோட்பாடு இல்லாமல் எதிர்ப்பு அரசியலை மட்டும் கை யில் எடுத்திருக்கிறார் விஜய். மக்களுக்கு நன்மை செய்வேன் என்று கூறுகிறார். ஆனால், என்ன செய்யப் போகிறார்,புதுமையாக, புதிதாக எந்த திட்டத்தைச் செயல்படுத்தப் போகிறார் என்று இதுவரை சொல்லவில்லை.
நாங்கள் ஆட்சி அமைப்போம் என்று சொல்வதற்கு அவருக்கு உரிமை இருக்கலாம். அதில் தவறு இல்லை. வார இறுதி நாள்களில் பிரசாரம் செய்கிறார். அதில் என்ன உத்தியைப் பயன்படுத்துகிறார் என்று தெரியவில்லை.
எல்லாருக்குமே கூட்ட ம் வரும். 1996ல் எனக்கும்தான் கூட்டம் கூடியது. அப்போதெல்லாம் சமூக வலைத்தளங்கள் கிடையாது. வேண்டுமானால் என்னிடம் உள்ள காணொளிக் காட்சிகளை போட்டு காண்பிக்கிறேன். மதுரையில் எனக்கு பெரிய கூட்டம் கூடியது.
நாட்டாமை, சூர்ய வம்சம் என ஹிட் திரைப்படங்களை கொடுத்துவிட்டுத் தான் நானும் அரசியலுக்கு வந்தேன். ஓய்வு பெற்ற பிறகு அரசியலுக்கு வரவில்லை. உச்ச நடிகராகத்தான் அரசியலுக்கு வந்தேன். நிறைய கூட்டங்களை நான் பார்த்துவிட்டேன். பிரபலம் என்ற அடிப்படையில் கூட்டம் வரும். கொள்கை கள் மூலமாக மக்கள் ஈர்க்கப்பட்டு சிறப்பாக செயல்படுவீர்கள் என்ற நம்பிக்கை வரும்போதுதான் ஆட்சியைக் கை ப்பற்ற முடியும்.
இவ்வாறு சரத்குமார் கூறினார்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?