" யோகிகளும்
மகான்களும்
எதற்கு
தேவதைகளும்
அதிதேவதைகளும்
எதற்கு ...?"
முனிவர்களும்
ஞானிகளும்
எதற்கு
இயற்கையும்
அழகும் எதற்கு ......?
பெண்களும்
பாசமும் எதற்கு
தாய் என்ற
தகுதி எதற்கு ...?
பெரியோர்களும்
வயதானோரும்
எதற்கு
அதிகாரமும்
ஆணவமும் எதற்கு ...?
வழி காட்ட
வந்தோரே பாதை
மாறினால் தவறினால்
தடுத்து தர்மம்
காட்ட வந்தவர்களே .... "
சில நேரம்
சுகமும் வேண்டும்
அடுத்த வாரிசும்
வேண்டும்
பெண் ஒளிச்சுடர்
அல்லவா .....?
பணம் சொத்து
அதிகாரம் பலம்
அரியாசணம்
ஏறும்போது
எளிமை நேர்மை
அடக்கம் ஆள
முன்வருவது
முறை தானே ...?
எதுவும் விதிப்படித்
தான் நடக்கும்
கர்மா என்பது
விதியின் அங்கமே ..."
- சீர்காழி. ஆர். சீதாராமன் .
Related News
Popular News
TODAY'S POLL
            தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?