அழகு பொய்கள்
ஆயிரம் சொன்னேன்
கவிதை வரியில் மட்டுமே
காதலில் இல்லை
உன்னையே நினைத்து
துடிக்கத் தெரிந்த
என் இதயத்திற்கு
நடிக்க தெரியாது
உன் பிரிவின் தாக்கம்
என்னை வாட்டுமென்று
தெரிந்திருந்தால்
கருவிலே கருகியிருப்பேன்
முட்கள் கிழிக்காமலே
ரத்தக்கண்ணீர் வடிக்கிறது
என் கண்கள்
உன்னை பார்க்க முடியாமல்
மறைந்திருக்கும்
என் இதயத்திற்குள்
உன்னை மறைத்துத்திருப்பதை
எப்படி சொல்வேன்
ஆயிரம் நட்சத்திரங்களை
ஒன்று சேரவிடாத வானைபோல்
ஆயிரம் ஆசைகளைக் கொண்ட
நம் காதலை பிரிக்கிறதே விதி
சுற்றியுள்ள தடைகளை
மீறவும் முடியவில்லை
என்னைச் சுற்றி வரும் உன் நினைவுகளை
மறக்கவும் முடியவில்லை
முகவரி தந்த காதலனே
உன் முடிவுரை
மரணம் என்றால்
என் முடிவும் அது தான்
பாரதி முத்து
ஓட்டேரி வேலூர்
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?