எஸ்ஐஆர் பணியிலிருந்து விடுவிக்க அங்கன்வாடி ஊழியர்கள் கோரிக்கை

எஸ்ஐஆர் பணியிலிருந்து விடுவிக்க அங்கன்வாடி ஊழியர்கள் கோரிக்கை



சென்னை: எஸ்ஐஆர் பணியிலிருந்து அங்கன் வாடி ஊழியர்களை விடுவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் வலியுறுத்தி உள்ளது. இதுதொடர்பாக சங்கத்தின் மாநிலத் தலைவர் இ. பாக்கியமேரி, பொதுச் செயலாளர் எஸ். தேவமணி, பொருளாளர் கே. சித்ரா ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில், “அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியா ளர்கள், பல துறைகளின் பணிகளை செய்து வருகின்றனர். இந்தப் பணிச்சுமையோடு, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப்பணி கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. இது சுமையானது மட்டுமல்ல, குழப்பம் நிறைந்ததாகவும் உள்ளது. ஊழியர்களுக்கு போதுமான பயிற்சி இன்மையால் மிகவும் கடினப்படுகின்றனர். இதனை கருத்தில் கொள்ளா மல் கடைநிலை ஊழியர்களை கட்டாயப்படுத்துவது, மிரட்டுவது போன்ற செயலில் தேர்தல் ஆணைய அதிகாரி கள் ஈடுபடுகின்றனர்.இதனால், கும்பகோணம் திரு.வி.க. மணியம்மை அங்கன்வாடி மைய ஊழியர் டி.சித்ரா, எ ஸ்ஐஆர் பணியை செய்ய இயலாமலும், அதிகாரிகளின் மிரட்டலுக்கு பயந்தும் தற்கொலைக்கு முயன்றுள்ளார். ஆபத்தான நிலையில் கும்பகோணம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஊழியரை தற் கொலைக்குத் தூண்டிய அதிகாரிகள் மீது தேர்தல் ஆணை யம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆணையத்தின் பணியி லிருந்து விடுவிக்ககோரி விண்ணப்பித்தவர்களை கட்டாயப் படுத்தாமல் விரைந்து விடுக்க வேண்டும். தேர்தல் ஆணையப் பணியிலிருந்து அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களை முழுமையாக விடுவிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%