டிஎன்பிஎஸ்சி ‘குரூப் - 2’ பணியிடங்கள் அதிகரிப்பு!

டிஎன்பிஎஸ்சி ‘குரூப் - 2’ பணியிடங்கள் அதிகரிப்பு!



சென்னை: குரூப் 2 மற்றும் 2ஏ ஆகிய பதவிகளில் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 1,270 ஆக அதி கரிக்கப்பட்டு உள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் சார்- பதிவாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், வன வர், முதுநிலை வருவாய் ஆய்வாளர் மற்றும் உதவியா ளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கான 645 காலிப்பணி யிடங்களை நிரப்புவதற்கான ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு 2-க்கு, கடந்த ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 13 வரை ஆன்லைன் மூலம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் விண்ணப்பங்களைப் பெற்றது. தொடர்ந்து முதல்நிலைத் தேர்வு செப்டம்பர் 28 அன்று நடைபெற்றது. இந்தத் தேர்வினை எழுதுவதற்கு 5 லட்சத்து 53 ஆயிரத்து 635 பேர் விண்ணப்பம் செய்தனர். அவர்களில் ஒருவரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. மீதமுள்ளவர்களில் 2 லட்சத்து 12 ஆயிரத்து 495 ஆண்களும், 3 லட்சத்து 41 ஆயிரத்து 114 பெண்களும், மாற்றுப் பாலினத்தவர் 25 பேரும் உள்ளனர். இந்த நிலையில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வா ணையத்தின் செயலாளர் கோபாலசுந்த ரராஜ் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு 2 (தொகுதி II மற்றும் IIA பணிகள்) இல் 625 காலிப்பணியிடங்கள் கூடுதலாக அறிவிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%