எஸ்.ஐ.ஆர். என்ற பெயரில் நாடு முழுவதும் குழப்பம் உருவாக்கப்பட்டுள்ளது - ராகுல்காந்தி குற்றச்சாட்டு

எஸ்.ஐ.ஆர். என்ற பெயரில் நாடு முழுவதும் குழப்பம் உருவாக்கப்பட்டுள்ளது - ராகுல்காந்தி குற்றச்சாட்டு



புதுடெல்லி,


வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்.ஐ.ஆர்.) நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் எஸ்.ஐ.ஆர். பணிகளில் ஈடுபட்டிருந்த பல்வேறு வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் பணிச்சுமை காரணமாக உயிரிழந்துள்ளனர். இதற்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், எஸ்.ஐ.ஆர். ஒரு திணிக்கப்பட்ட அடக்குமுறை என்று அவர் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக ராகுல்காந்தி வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-


வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் என்ற பெயரில் நாடு முழுவதும் குழப்பம் உருவாக்கப்பட்டுள்ளது. விளைவு? மாரடைப்பு, மன அழுத்தம், தற்கொலை என மூன்று வாரங்களில் 16 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் தங்கள் உயிர்களை இழந்துள்ளனர். எஸ்.ஐ.ஆர். என்பது சீர்திருத்தம் அல்ல, அது திணிக்கப்பட்ட அடக்குமுறை.


குடிமக்கள் தங்கள் பெயர்களைக் கண்டுபிடிக்க வாக்காளர் பட்டியலின் ஆயிரக்கணக்கான ஸ்கேன் செய்யப்பட்ட பக்கங்களை ஆராய வேண்டிய ஒரு அமைப்பை இந்திய தேர்தல் ஆணையம் உருவாக்கியுள்ளது.


எஸ்.ஐ.ஆரின் நோக்கம் தெளிவாக உள்ளது. அது உண்மையான வாக்காளர்களை சோர்வடையச் செய்து, வாக்காளர் மோசடி தடையின்றி தொடர அனுமதிக்கிறது. இந்தியா உலகிற்கு அதிநவீன மென்பொருளை உருவாக்குகிறது, ஆனால் இந்திய தேர்தல் ஆணையம் இன்னும் காகிதங்களின் காட்டை உருவாக்குவதில் பிடிவாதமாக உள்ளது.


நோக்கம் தெளிவாக இருந்திருந்தால், பட்டியல் டிஜிட்டல் வடிவில், தேடக்கூடிய வகையில் இருந்திருக்கும். மேலும் 30 நாள் அவசரத்தில் பணியை விரைந்து முடிப்பதற்குப் பதிலாக வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்பு எடுத்துக் கொள்வதில் கவனம் செலுத்த இந்திய தேர்தல் ஆணையம் நேரம் எடுத்திருக்கும்.


எஸ்.ஐ.ஆர். என்பது வேண்டுமென்றே செய்யப்பட்ட ஒரு சூழ்ச்சி. இதன் மூலம் குடிமக்கள் துன்புறுத்தப்படுகிறார்கள். இது ஒரு சதி; அதிகாரத்தைப் பாதுகாக்க ஜனநாயகம் தியாகம் செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%