தீர்ப்பாய திருத்த சட்டம்: நீதித்துறையின் சுதந்திரத்தை பாதிக்கும்

தீர்ப்பாய திருத்த சட்டம்: நீதித்துறையின் சுதந்திரத்தை பாதிக்கும்



பிரிவு உபசார விழாவில் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் பேச்சு


தீர்ப்பாய திருத்த சட்டம் நீதித்துறையின் சுதந்திரத்தை பாதிக்கும் என்று பிரிவு உபசார விழாவில் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் பேசினார்.


இந்தியாவின் உச்சபட்ச நீதி அமைப்பான சுப்ரீம் கோர்ட்டின் 52-வது தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், பதவிக்காலம் நாளை (23-ந்தேதி)யுடன் முடிவடைகிறது. இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட் வக்கீல்கள் சங்கம் ஏற்பாடு செய்த பிரிவு உபசார விழாவில் பி.ஆர்.கவாய் கலந்து கொண்டார். அப்போது அவர் ஆற்றிய பிரியாவிடை உரையில் கூறியதாவது:-


அமராவதியில் ஒரு எளிய பின்னணியிலிருந்தும், அதிகம் அறியப்படாத இடத்திலிருந்தும் சுப்ரீம் கோர்ட்டுக்கு வந்த எனது பயணத்தை அரசியலமைப்புச் சட்டமும், எனது பெற்றோரின் மதிப்புகளும் சாத்தியமாக்கியது. 40 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய பயணத்தில் நான் மிகவும் திருப்தி அடைகிறேன்.


அரசியலமைப்பின் தீவிர மாணவராக, சமத்துவம், நீதி, சுதந்திரம் மற்றும் சகோதரத்துவத்தின் நற்பண்புகள் எப்போதும் என் இதயத்திற்கு நெருக்கமானவை. நான் திருப்தியாகவும், நிம்மதியாகவும் இருக்கிறேன். எனது தீர்ப்புகளில் ஒன்று விமர்சிக்கப்பட்டிருந்தாலும், அவற்றை நான் விமர்சிக்கவில்லை அல்லது பதிலளிக்கவில்லை, ஏனெனில் மூன்று ஆண்டுகளுக்கும் மேலான எனது பணி அதற்கு சான்றாக உள்ளது. தீர்ப்பாய சீர்திருத்தச் சட்டம் நீதித்துறையின் சுதந்திரத்தை மோசமாக பாதிக்கும் விதிகளைக் கொண்டுள்ளது. பார் மற்றும் பெஞ்ச் நீதித்துறையின் தங்கத்தேரின் இரண்டு சக்கரங்கள். எனக்கு ஒத்துழைப்பு அளித்த அனைவருக்கும் நன்றி.


இவ்வாறு அவர் பேசினார்.


நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வக்கீல்கள், தலைமை நீதிபதிக்கு எழுந்து நின்று கைதட்டி பாராட்டு தெரிவித்தனர். அடுத்த தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டு உள்ள சூர்ய காந்த், தலைமை நீதிபதி கவாய்க்கு பாராட்டு தெரிவித்தார். வருகிற 24-ந்தேதி சூர்யகாந்த் தலைமை நீதிபதியாக பதவியேற்க உள்ளார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%