ஏரியூரில் திருவள்ளுவர் தின கொண்டாட்டம்

ஏரியூரில் திருவள்ளுவர் தின கொண்டாட்டம்



ஏரியூர் தமிழ்ச் சங்கம் மற்றும் சிகரல அள்ளி இயற்கை மற்றும் கல்வி அறக்கட்டளை சார்பில் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு இல்லங்களில் திருக்குறள், இயற்கையோடு இணைவோம், வாழும் வள்ளுவமும் எனும் பொருண்மையில் முப்பெரும் விழா ஏரியூர் பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.



நிகழ்விற்கு சமூக ஆர்வலர் மா.நரசிம்மகுமார் தலைமை வகித்தார்.


சிகரல அள்ளி இயற்கை மற்றும் கல்வி அறக்கட்டளை நிர்வாகி இயற்கை துரை முத்துக்குமார், 


சமூக ஆர்வலர் கமலேசன், ஜெயபிரகாஷ், வெண்ணிலா மல்லமுத்து, கோகுல்காந்தி , அ.சதீஸ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


முன்னதாக ஏரியூர் தமிழ்ச் சங்கத்தின் நிறுவுநர் மற்றும் தலைவர் நா.நாகராஜ் வரவேற்று பேசினார்.



தமிழ் ஆர்வலர் காதர் , கு.ஹரி, ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.


நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக சின்னப்பள்ளத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் மா.பழனி பங்கேற்று பேசினார். 


அப்போது அவர் பேசுகையில் " திருவள்ளுவர் தினத்தை தமிழக அரசு வெகு விமரிசையாக கொண்டாடி வருகிறது. 


பொதுமக்களிடம் திருக்குறள் சார்ந்த சிந்தனைகளை கொண்டு சேர்ப்பது இன்றைய காலகட்டத்தில் அவசியமாகிறது.


மாணவர்களுக்கு திருக்குறளின் அறநெறி கருத்துக்களை எடுத்துரைக்க வேண்டும்.


வீடுகளில் கண்டிப்பாக திருக்குறள் புத்தகம் வைத்திருக்கும் வேண்டும் மேலும் ஒவ்வொரு நாளும் ஒரு திருக்குறளை படித்து வாழ்க்கையில் பின்பற்ற வேண்டும்.


இன்றைய தலைமுறையினருக்கு திருக்குறளின் உன்னத கருத்துக்களை அவசியம் கொண்டு சேர்க்க வேண்டும்.


மதிப்புமிக்க மனிதனாக வாழ திருக்குறள் அவசியம் படித்து வாழ்வில் பின்பற்ற வேண்டும் .


திருக்குறள் சார்ந்தும் , இயற்கை வாழ்வியலோடும் வாழ வேண்டும் என்றார்.


சிகரல அள்ளி இயற்கை மற்றும் கல்வி அறக்கட்டளை நிர்வாகி இயற்கை . துரை முத்துக்குமார் நன்றி கூறினார்.


நிகழ்வின் நிறைவாக மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகம் வழங்கப்பட்டது. திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.



நிகழ்வில் ஏரியூர் காவல் துறையினர், மாணவ மாணவிகள், பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%