ஏரும் எருதும்

ஏரும் எருதும்


 பார் போற்றும் தமிழர் பெருமை

ஏர் சொல்லும் சிறப்பாக


காலிரண்டு உறவாடி

கழனி புகழ் பாடி

காசினிக்கு அறம் சொல்லும் 


களர் நிலமும் கதிராகும்

உவர் மண்ணும் உவப்பாகும்

உழவனவன் வியர்வையில்

உப்பும் இனிப்பாகும்


எருதின் காலோட்டம்

பூமிப் பந்தை திசை மாற்றும்

சுழலும் புவியும்

சுகமாக உலா வரும்


மண்ணெல்லாம் பொன்னாகும்

தன்னிலை மறந்து கவிபாடும்

தாவரப்பிள்ளை தான் வளர 

தவமிருந்து பெற்றெடுக்கும் 


ஏரும் எருதும் துணையிருந்தால்

பேரும் புகழும் தேடி வரும்

நேரும் துன்பம் யாவையும்

நேர்த்தியாகத் தீர்த்து விடும்


தித்திக்கும் பொங்கலிலே

திகட்டாத சுவை நல்கும்

வாயில்லா ஜீவனும்

வற்றாது உழவு காணும்

அறுவடையின் பலனதுவும்

அகிலத்தின் வாழ்வளிக்கும்

அயராத உழைப்பாலே

அனுதினமும் உணவாகும்


ஏரும் எருதும் துணையாக்கி

எங்கும் நிறைந்த இயற்கையைப்

பொங்கும் இன்பம் 

தனைக் கொண்டு 

போற்றி வாழ்வோம் என்றென்றும்.


*************************************

தமிழ்நிலா

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%