ஆவி சேர்ந்த ஆனந்தம்

ஆவி சேர்ந்த ஆனந்தம்



முகில் இழைத்த கன்னங் கரிய குழலோ


அகிற் புகை மணங்கமழ மெல்ல அசையும்!


மயிற்பீலி சேர்த்ததை முடிந்த அழகில் 

மன மோகித்து மதி மயங்கிக் கிடக்கும்!


விழி மூடி கண்ணன் நினைவில் லயித்து

 கண்கள் இன்னும் கசிந்து கிறங்கி மெல்ல சிலிர்க்கும்!


மலர்மாலை தரித்த குளிர் மேனி,

கோதை சூடிக்கொடுக்க இன்னும் குளிரும்!


.தங்க மகுடம் தாங்கும் அந்த சிரசில், தங்கம் கர்வம் கொண்டு கவி பாடும்..!


 உந்தன் அங்கம் தழுவும் பட்டு ஆடை கண்டு ஆயர் பாடி மிக ஏங்கும்!


 கொவ்வைச் சின்ன செவ்விதழின் நகையில்...

முத்து மின்ன மறந்து மையல் கொள்ளும்!


விண்ணில் நீந்தும் வெண்ணிலவும் தயங்கி உன்னைக் கண்டு குளிர நிற்கும்..


மின்னும் தாரா கணங்கள் எல்லாம் குழைந்து உன்னில் மாலையாக மண்ணில் இறங்கும்


எண்ணம் ஏதுமறி யாத இந்த யாவும், உன்னைப் பின்னிப் பிணைந்து கடைத்தேற.... 


இன்னும் என்ன நான் சொல்லவோ வேண்டும், 

ஏழை உள்ளக் கிடக்கை யது தன்னை...!

.

நீலக் கண்ணன் மலர் பாதந் தன்னில்

மாயக் கால நேரம் எதையுங் கருதாது,


பல ஜென்மம் எடுத்த பயனாக

பாவியாவி சேர்த்துக் கொள்ள வேணும்🙏



மீனா சேகர்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%