
எல்லாம் முடியும் என்பவனே...
என்னினிய இளைஞனே!
மனம் என்பது
மாபெரும் சமுத்திரம்...
அயர்வே இல்லாமல்
அனுதினமும் உருவாகும்
பிரச்னை என்னும் அலைகள்
பிரபஞ்சம் உள்ளவரை
பேதமில்லாமல் உண்டு உண்டு...!
அலைகள் அவஸ்தை
என்று
எந்த சமுத்திரமும்
எந்த நேரத்திலும்
சலித்தது இல்லை..
ஆயுள் நிரந்தரத்துக்கான
ஆக்ஸிஜன் என்றே
அலைகளை மதித்து ஆராதிக்கும் காண்..
ஆகவே இளைஞனே!
அடுத்தடுத்து வரும்
சோதனைகள் யாவையும்
சுகம்பல படைக்கும்
சொர்க்க வாசல் என்றே
மனதில் பதித்து வலுவாய் விழித்துக்
கொள்...
மதியின் விசாலத்தில் தான்
மனதின் இறுக்கம் நீங்கும்...
மனதின் நெருக்கம்
தாங்கும்...
மவராமல் முணங்கும்
மொட்டுகளைத் தேடி
வண்டுகள் என்றும் வருவதில்லை...
மலர்ந்து விரிந்த
இதழ்களின் மணத்தில்
இதம் உணர்ந்து
இதயம் நனைந்தால் தான்
விருப்பத் தேடலில்
வட்டமிட்டு பறந்து
வண்டுகள் வந்து வாத்சல்யமாய் அமரும்...
மகரந்தச் சேர்க்கை
அற்புதமாய் நிகழும்...
மண்ணின் வளம்
மரபுசார் நெறியில்
மாண்புடனே பெருகும்
ஆகவே இளைஞனே!
பக்குவம் கனியாத
மாசு எண்ணங்களால்
மனதைப் பொத்தி வைத்து
மணம் விளையாமல்
மங்கிப் போய்விடாதே
மகத்தான எண்ணங்களால் மனதை
மலர்த்தி வைத்து
ஏற்றம் பல காண்!
நெல்லை குரலோன்
பொட்டல் புதூர்
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?