ஏலச்சீட்டு நடத்தி ரூ.2 கோடி மோசடி - சிட்பண்ட் நிறுவன உரிமையாளர் கைது

ஏலச்சீட்டு நடத்தி ரூ.2 கோடி மோசடி - சிட்பண்ட் நிறுவன உரிமையாளர் கைது



காசோலையை வங்கியில் செலுத்தியபோது சம்பந்தப்பட்ட கணக்கில் பணம் இல்லை என்று வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை,


சென்னை மண்ணடியில் உள்ள சவரிமுத்துதெரு, மற்றும் பி.வி.அய்யர் தெரு ஆகிய இடங்களில் சிகரம் மற்றும் சிற்பி சிட்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்களை நடத்தி வந்தவர் ரவி(வயது 57). இவரது நிறுவனத்தில் தஞ்சாவூரைச் சேர்ந்த ஜெயசந்திரன் மற்றும் அவரது மனைவி பிரேமலீலா ஆகியோர் கடந்த 2015-ம் ஆண்டு முதல் பலமுறை ஏலச்சீட்டில் பணம் கட்டி வந்துள்ளனர்.


இந்த நிலையில், அவர்களுக்கு முதலீடு மற்றும் Dividend செட்டில்மெண்ட் செய்யும் வகையில் ரவி ரூ.2,34,83,125/- மதிப்பிலான காசோலையை கொடுத்துள்ளார். ஆனால் அந்த காசோலையை வங்கியில் செலுத்தியபோது சம்பந்தப்பட்ட கணக்கில் பணம் இல்லை என்று வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இதனால் தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்த ஜெயசந்திரன் மற்றும் பிரேமலீலா, இந்த விவகாரம் தொடர்பாக சென்னை பெருநகர காவல் ஆணையாளரிடம் புகார் அளித்தனர். இந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய மத்திய குற்றப்பிரிவு போலீசார், தலைமறைவாக இருந்த ரவியை தேடிப்பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தொடர்ந்து இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மற்ற நபர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%