ஐகோர்ட் மதுரை கிளை பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை
Nov 28 2025
21
மதுரையில் பாதுகாப்பு பணியில் இருந்த சிறப்பு காவல்படை காவலர் தற்கொலை கடிதம் எழுதி வைத்துவிட்டு துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
மதுரை மாவட்டம், எழுமலை கோட்டைப்பட்டியைச் சேர்ந்த மகாலிங்கம் என்ற சிறப்புப் படை காவலர் 2023 ஆம் ஆண்டு காவலர் பணியில் சேர்ந்துள்ளார். சிறப்பு காவல்படை காவலரான மகாலிங்கம் சென்னை ஐகோர்ட் மதுரை கிளை முன்பாக நேற்றிரவு முதல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்துள்ளார்.
இந்த நிலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் திடீரென பாதுகாப்பிற்காக வைத்திருந்த துப்பாக்கியால் தனக்குதானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்துள்ளார். அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த மற்ற காவலர்கள், மகாலிங்கத்தை மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும்வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து காவலர் மகாலிங்கத்தின் உடல், உடற்கூராய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
காவலர் மகாலிங்கம் தற்கொலை சம்பவம் குறித்து சென்னை ஐகோர்ட் மதுரை அமர்வு காவல் நிலைய காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்கட்ட விசாரணை யில் காவலர் மகாலிங்கம் தனது தற்கொலைக்கு யாரும் காரணமில்லை எனக் கூறி கடிதம் எழுதிவைத்துவிட்டு, பின்னர் தற்கொலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?