துறையூர் வழக்கறிஞர் வீட்டில் விலை உயர்ந்த பைக் திருட்டு
Nov 28 2025
68
திருச்சி மாவட்டம் துறையூர் பெரிய தெப்பக்குளம் பகுதியில் வசித்து வருபவர் ராஜா, இவர் துறையூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ளார். இவருடன் இவரது தம்பி சதீஷ் குமார் மற்றும் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் குடும்பத்தினர், வீட்டின் கேட்டை பூட்டிவிட்டு தூங்க சென்று விட்டனர். அதிகாலை எழுந்து பார்த்த பொழுது, வீட்டில் வைத்திருந்த விலை உயர்ந்த சுமார் ரூ. 2 லட்சம் மதிப்புள்ள இருசக்கர வாகனம் திருடு போனது தெரிய வந்தது.
மேலும் அவரது வீட்டில் வைத்திருந்த மற்றொரு இரு சக்கர வாகனம் பெட்ரோல் இல்லாத காரணத்தால் திருடர்கள் வீட்டில் இருந்து சுமார் 100 அடி தூரத்தில் சாலை ஓரத்தில் தூக்கி எறிந்து விட்டு சென்றுள்ளனர். இதே போல் ஆத்தூர் சாலையில் இரு சக்கர வாகன பழுது நீக்கும் கடையில் வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டரை திருடி சென்ற ஆசாமிகள், பாதி வழியில் பெட்ரோல் இல்லாததால் துறையூர் காவல் தாய் அம்மன் கோவில் அருகே, அந்த வாகனத்தையும் நிறுத்தி விட்டு சென்றுள்ளனர்.
இது பற்றி தகவல் அறிந்த துறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அடுத்தடுத்து இரு சக்கர வாகனங்களை திருடிய மர்ம நபர்களை, வலை வீசி தேடுகின்றனர். மேலும் ,அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?