ஐ.நா.வில் ஆபத்துக்குரிய வார்த்தையை பேசிய நெதன்யாகு; பாலஸ்தீனிய தூதர் கடும் கண்டனம்

ஐ.நா.வில் ஆபத்துக்குரிய வார்த்தையை பேசிய நெதன்யாகு; பாலஸ்தீனிய தூதர் கடும் கண்டனம்



 காசா,


ஒன்றரை ஆண்டுகளாக காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில், பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டு உள்ளனர். பணய கைதிகள் விடுவிப்பில் முன்னேற்றம் ஏற்படாத சூழலில், போரானது தொடர்ந்து வருகிறது.


இந்நிலையில், இந்தியாவுக்கான பாலஸ்தீனிய தூதர் அப்துல்லா அபு ஷாவேஷ் செய்தியாளர்களிடம் இன்று பேசும்போது, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஒரு தேடப்படும் குற்றவாளி என்பது கூற வேண்டிய முக்கிய விசயம். நீதியில் இருந்து தப்பியோடியவர்.


சர்வதேச சமூகத்தில், இந்த நபர்களுக்கு நாம் இதுபோன்று கூறுவது அவசியம். நெதன்யாகு, அவருடைய பேச்சில், ஆபத்துக்குரிய வார்த்தை ஒன்றை கூறினார். பினிஷ் தி ஜாப் என்றார்.


இஸ்ரேல் மக்கள் மற்றும் இஸ்ரேல் சமூகத்தில் நிபுணத்துவம் வாய்ந்தவர்களாலேயே, பினிஷ் தி ஜாப் என்பதற்கான சரியான அர்த்தம் தெரிய வரும் என்றார்.


காசாவில் இதே நடவடிக்கைகளை நெதன்யாகு நடத்தி வருகிறார். பாலஸ்தீனியர்களை காலி செய்யும் வேலையை செய்து கொண்டிருக்கிறார்.


மேற்கு கரையிலும் இதே நடவடிக்கையை அவர் எடுக்கிறார். காசாவில் இருந்து பாலஸ்தீனியர்களை நாங்கள் வெளியேற்றுவோம் என்று கூறினார். இதுவே அவருடைய சரியான இலக்காகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.


அவரை இஸ்ரேல் மக்கள் ஒருவரும் நம்பவில்லை. ஆனால், காசா மற்றும் மேற்கு கரை என இரண்டு பகுதிகளை பற்றியும் நாங்கள் பேசி கொண்டிருக்கிறோம் என்றார். காசாவில் 65 ஆயிரம் பேர் வரை கொல்லப்பட்டு உள்ளனர். அவர்களில் பலர் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர் என்றார்.


காசாவில் பஞ்சம் நிலவுகிறது என ஐ.நா. அறிவித்தது. இஸ்ரேல் மக்களோ, அமெரிக்கர்களோ அதனை ஏற்க மறுத்தனர். ஆனாலும், காசாவில் பஞ்சம் என அறிவிக்கப்பட்டு உள்ளது என்றும் ஷாவேஷ் கூறியுள்ளார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%