காசாவில் 140 பயங்கரவாத இலக்குகள் மீது தாக்குதல்: இஸ்ரேல் பாதுகாப்பு படை
Sep 29 2025
40

டெல் அவிவ்,
காசா மீது ஒன்றரை ஆண்டுகளாக இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில், பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில், இஸ்ரேல் பாதுகாப்பு படை எக்ஸ் வலைதளத்தில் இன்று வெளியிட்ட செய்தியில், காசா நகரில், இஸ்ரேல் பாதுகாப்பு படை மற்றும் இஸ்ரேல் விமான படை இணைந்து நடத்திய தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் ராணுவ கட்டமைப்புகள் மற்றும் வளாகங்கள் தகர்க்கப்பட்டன. பீரங்கியை தாக்கி அழிக்கும் ஏவுகணையை ஏவிய பல்வேறு பயங்கரவாதிகளும் அடையாளம் காணப்பட்டு கொல்லப்பட்டனர் என தெரிவித்து உள்ளது.
காசாவில் 140 பயங்கரவாத இலக்குகளை இஸ்ரேல் பாதுகாப்பு படை தாக்குதல் நடத்தி அழித்துள்ளது என்றும் தெரிவித்து உள்ளது.
எனினும், ஹமாஸ் அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், இஸ்ரேல் தொடர்ந்து நடத்தும் தாக்குதலால், காசாவில் போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டு உள்ளது. மத்தியஸ்தர்களின் நேர்மறையான எந்தவித அணுகுமுறையையும் பரிசீலனை செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம் என அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?