
ஓசூர், செப். 26-
ஓசூர் ராமநாயக்கன் ஏரி பூங்காவில் திருமணம் ஆகாதவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
ஓசூரில் 152 ஏக்கரில் ராமநாயக்கன் ஏரி உள்ளது. இந்த ஏரிக்கரையில் மாநகராட்சி சார்பில் 4 ஏக்கர் பரப்பளவில் குழந்தைகள் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பூங்காவுக்கு அதிக அளவில் பொதுமக்கள் வந்து செல்கின்றனர். பகல் நேரங்களில் மாணவ, மாணவிகள் அதிக அளவில் வந்து செல்வதுடன் சிலர் பிறந்தநாளைக் கொண்டாடி மகிழ்கின்றனர். இந்நிலையில், பூங்காவில் காதல் ஜோடிகள் வருகை அதிகரித்திருப்பதோடு, பூங்காவின் உள்ளே முகம் சுழிக்கும் அளவுக்கு காதல் ஜோடிகள் அத்துமீறும் செயல்களும், சிலர் மது அருந்தும் இடமாகவும் மாற்றி வருகின்றனர். இதையடுத்து, பூங்காவை காலை மற்றும் மாலை நேரம் மட்டும் மாநகராட்சி நிர்வாகம் திறந்து வருகிறது.
இதனிடையே, பூங்கா நுழைவாயில் பகுதியில் காவல் துறை சார்பில் ஒரு பேனர் வைக்கப்பட்டுள்ளது. அதில், ‘திருமணம் ஆகாதவர்கள் உள்ளே அனுமதியில்லை’ என வாசகம் குறிப்பிடப்பட்டுள்ளது இது பொதுமக்களிடையே அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. காதலர்களை எச்சரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் வைக்கப்பட்ட பேனரில் இடம்பெற்ற வாசகம் திருமணம் ஆகாதவர்கள் உள்ளே அனுமதியில்லை எனக் குறிப்பிடப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதை பலரும் சமூக வலைதளங்களில் கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?