
மதுரை, செப். 26-
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 11-வது ஆசியா அளவிலான நீச்சல் போட்டிகள் வருகிற 28ம் தேதி முதல் அக்.10-ம் தேதி வரை நடக்கிறது. இதில் மதுரை லிசார்ட்லீயர் பள்ளி மாணவி ரோஷினி பங்கேற்கிறார். மதுரையில் இருந்து ஆசிய நீச்சல் போட்டியில் பங்கேற்கும் இரண்டாவது நீச்சல் வீரர்.
ஆசிய போட்டியில் பங்கேற்கும் ரோஷினிக்கு, தமிழ்நாடு நீச்சல் சங்க துணைத்தலைவர் எம்,ஸ்டாலின் ஆரோக்கியராஜ் தலைமையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மண்டல முதுநிலை மேலாளர் வேல்முருகன், மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா முன்னிலையில் வழியனுப்பும் விழா ரேஸ்கோர்ஸில் நடந்தது.மாவட்ட நீச்சல் சங்க செயலாளர் என்.கண்ணன் மற்றும் நீச்சல் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?