ஓசூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், கரூரில் இருந்து சபரிமலைக்கு நவ. 28 முதல் சிறப்பு பேருந்துகள்

ஓசூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், கரூரில் இருந்து சபரிமலைக்கு நவ. 28 முதல் சிறப்பு பேருந்துகள்



சென்னை: ஓசூர், தரு​மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மற்​றும் கரூரிலிருந்து சபரிமலைக்கு வரும் 28-ம் தேதி முதல்சிறப்பு பேருந்​துகள் இயக்​கப்​படும் என்று அரசு விரைவுப் போக்​கு​வரத்​துக் கழக மேலாண் இயக்​குநர் ரா.மோகன் தெரி​வித்​துள்​ளார்.


இது தொடர்​பாக அவர் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: கேரள மாநிலத்​தில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்​பன் கோயிலுக்கு ஆண்​டு​தோறும் மண்டல பூஜை மற்​றும் மகர விளக்கு திரு​விழாக்​களின்​போது தமிழகத்​தின் முக்​கிய நகரங்​களி​லிருந்து அரசு விரைவுப் போக்​குவரத்​துக் கழகம் சார்​பில் ஆண்​டு​தோறும் சிறப்​புப் பேருந்​துகள் இயக்​கப்​பட்டு வரு​கின்​றன.


இந்த ஆண்​டும் கடந்த 16-ம் தேதி முதல் சென்னை கோயம்​பேடு மற்​றும் கிளாம்​பாக்​கம், திருச்​சி, மதுரை மற்​றும் புதுச்​சேரி, கடலூர் ஆகிய இடங்​களி​லிருந்து பம்​பைக்​கு, அதிநவீன சொகுசு மிதவைப் பேருந்​துகள், குளிர்​சாதனப் பேருந்து மற்​றும் குளிர்​சாதனமில்லா இருக்கை மற்​றும் படுக்கை வசதி உள்ள சிறப்​புப் பேருந்​துகள் இயக்​கப்​படு​கின்​றன.


இதன் தொடர்ச்​சி​யாக ஓசூர், தரு​மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மற்​றும் கரூர் பகு​தி​யினர் பயன்​பெறும் வகை​யில் அதிநவீன குளிர்​சாதனமில்லா இருக்கை மற்​றும் படுக்கை வசதி கொண்ட பேருந்து வரும் 28-ம் தேதி முதல் ஜன. 16-ம் தேதி வரை இயக்​கப்​படு​கிறது.


இந்த வருடம் பக்​தர்​கள் கூடு​தலாக பயணம் செய்ய முன்​வரு​வார்​கள் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது. இதைக் கருத்​தில் கொண்டு சென்னை மற்​றும் இதர இடங்​களி​லிருந்து கூடு​தல் பேருந்​துகள் இயக்​கு​வதற்கு அனு​மதி பெறப்​பட்​டு, சிறப்​பான முறை​யில் பேருந்​துகளை இயக்க ஏற்​பாடு செய்​யப்​பட்​டுள்​ளது. மேலும், குழு​வாகச் செல்​லும் பக்​தர்​களுக்கு வாடகை அடிப்​படை​யில் பேருந்து வசதி செய்து தரப்​படும்.


எனவே, பயணி​கள் தங்​கள் பயணத்தை முன்​கூட்​டியே திட்​ட​மிட்டு முன்​ப​திவு செய்து பயணிக்​கும்​படி கேட்​டுக் கொள்​ளப்​படுகிறார்​கள். பேருந்​துகளின் விவரம் உள்​ளிட்ட தகவல்​களுக்கு 94450 14424 மற்​றும் 94450 14463 ஆகிய செல்​போன் எண்​களைத் தொடர்பு கொள்​ளலாம். இவ்​வாறு செய்​திக்​குறிப்​பில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%