திருவண்ணாமலை மாவட்டம் செப்-17
கீழ்பென்னாத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று ஓசோன் தின விழிப்புணர்வு ஊர்வலம் பள்ளி தலைமை ஆசிரியர் முனைவர் திரு எம். பிரசன்னா அவர்கள் தலைமை வகித்தார்.
முதுகலைத் தமிழாசிரியர் ராமமூர்த்தி முன்னிலை வகித்தார். கீழ்பென்னாத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் குமரன் கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தார். பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் மற்றும் கீழ்பென்னாத்தூர் பேரூராட்சி தலைவர் திரு.சரவணன் அவர்கள் வாழ்த்துரையுடன் தொடங்கி வைத்தார்.இப் பேரணியில் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.இந்த விழிப்புணர்வு ஊர்வலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கி கீழ்பென்னாத்தூர் வீதிகளில் ஊர்வலமாக சென்று மீண்டும் பள்ளியில் முடிவு பெற்றது. பள்ளி மாணவர்கள் 600 க்கும் மேற்பட்டோர் விழிப்புணர்வு ஊர்வலத்தில் கலந்துகொண்டு ஓசோன் தின விழிப்புணர்வு உறுதிமொழியினை ஏற்றனர்.இந்தப் பேரணியில் நாட்டு நலப்பணித்திட்டம், தேசிய பசுமை படை , ஓசோன் படல விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி ஊர்வலமாக சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தனர். விழிப்புணர்வு பேரணிக்கு பள்ளி வேளாண்மை ஆசிரியர் ஜெயக்குமார் அவர்கள்ஒருங்கிணைத்து நடத்தினார். விழா முடிவில் உதவி தலைமை ஆசிரியர் கேசவன் அவர்கள் நன்றி உரையாற்றினார். ஆசிரியர்கள் ராமமூர்த்தி, உடற்கல்வி இயக்குநர் ஆனந்தன், முத்துக்குமார், மண்ணு, தர்மசக்கர் ஜெயக்குமார் ,
ஆரிமுத்து ஜெயகாந்தன் சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?