ஓசோன் தின விழாவில் 1200மாணவிகளுக்கு மஞ்சள்பை

ஓசோன் தின விழாவில்  1200மாணவிகளுக்கு மஞ்சள்பை


திருப்பத்தூர், செப். 17-

திருப்பத்தூர் மாவட்ட தேசிய பசுமை படை சார்பில் உலக ஓசோன் தின விழா திருப்பத்தூர் மீனாட்சி அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் நேற்று நடைபெற்றது. மாவட்ட கல்வி அலுவலர் சத்யபிரபா தலைமை வகித்தார். தேசிய பசுமை படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரவிவர்மன், மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் இளவரசி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னதாக பள்ளி தலைமை ஆசிரியர் செலின் ஏஞ்சல் மேரி வரவேற்றார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புண்ணியகோட்டி, மாவட்ட வனத்துறை அலுவலர் சோழராஜன் ஆகியோர் பேசினர். கிரீன் டிரஸ்ட் இயக்குநர் மார்க்க சகாயம் ஓசோன் தினம் குறித்தும், அதன் விளைவுகள் குறித்தும் சிறப்புரையாற்றினார். இறுதியில், தேசிய பசுமை படை மாவட்ட உதவி ஒருங்கிணைப்பாளர் அருண்குமார் நன்றி கூறினார். ஓசோன் தினத்தை முன்னிட்டு 1,200 மாணவிகளுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மஞ்சள் துணிப்பைகள் வழங்கப்பட்டன. இறுதியில், சிறப்பு விருந்தினர்கள் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%