புரட்டாசி சனிக்கிழமைகளில் நவதிருப்பதி கோவில்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கம்
Sep 16 2025
61

திருநெல்வேலி, செப்.17-
திருநெல்வேலி அரசு போக்குவரத்து கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
புரட்டாசி மாத சனிக்கிழமைகளான செப். 20, 27, அக்டோபர் 4, 11-ம் தேதிகளில் நவதிருப்பதி கோவில்களுக்கு பக்தர்கள் சென்றுவர சிறப்பு சேவை பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேற்கண்ட நாட்களில் காலை 6 மணிக்கு திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டு நவ திருப்பதி தலங்களான ஸ்ரீவைகுண்டம், நத்தம், திருப்புளிங்குடி, இரட்டை திருப்பதி, பெருங்குளம், தென்திருப்பேரை, திருக்கோளூர், ஆழ்வார்திருநகரி ஆகியவற்றுக்கு சென்று இரவில் திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்துக்கு வந்து சேரும்.
இதற்கான பேருந்து கட்டணம் நபர் ஒன்றுக்கு ரூ.500 ஆகும். இதற்கு முன்பதிவு செய்ய விரும்புவோர் திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் காலை 8 மணி முதல் இரவு 8 மணிவரை கட்டண தொகையை செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் அரசு போக்குவரத்து கழக இணையதளம் www.tnstc.in மூலமாகவும் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும் 4 புரட்டாசி சனிக்கிழமைகளிலும் திருநெல்வேலி சந்திப்லிருந்து திருவேங்கடநாதபுரம், கருங்குளம், அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோவில்களுக்கும், வள்ளியூரிலிருந்து திருக்குறுங்குடி நம்பி கோவிலுக்கும், வீரவநல்லூரிலிருந்து அத்தாளநல்லூருக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் தொடர்புக்கு 7904906730, 9994462713 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?