ஓய்வுக்கு முன் ' சிக்ஸர்' அடிப்பது போல உத்தரவிடுவதா ? நீதிபதிகள் மீது உச்ச நீதிமன்றம் கடும் அதிருப்தி

ஓய்வுக்கு முன் ' சிக்ஸர்' அடிப்பது போல உத்தரவிடுவதா ? நீதிபதிகள் மீது உச்ச நீதிமன்றம் கடும் அதிருப்தி



' கிரிக்கெட் போட்டியில் கடைசி ஓவரின் போது , அடுத்தடுத்து , ' சிக்ஸர்'கள் அடிப்பது போல , ஓய்வு பெறும் முன் நீதிபதிகள் சிலர் நிறைய உத்தரவுகளை பிறப்பிப்பது வளர்ந்து வருகிறது . இது மிகவும் ஆட்சேபத்துக்குரியது' என , உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது


மத்திய பிரதேசத்தின் முதன்மை மற்றும் மாவட்ட நீதிபதி ஒருவர் , கடந்த நவம்பர் மாத இறுதியுடன் ஓய்வு பெறுவதாக இருந்தது . அதற்கு முன்பாக நவ . , பத்தொன்பதாம் தேதி அவர் பணியில் இருந்து திடீரென இடைநீக்கம் செய்யப்பட்டார் . ஏனெனில் சம்பந்தம் இல்லாமல் அடுத்தடுத்து இரண்டு உத்தரவுகளை பிறப்பித்ததால் , மத்திய பிரதேச உயர் நீதிமன்றம் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்தது


இதை எதிர்த்து மாவட்ட நீதிபதி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் . இம்மனு தலைமை நீதிபதி சூர்ய காந்த் , நீதிபதிகள் ஜாய்மால்யா பக்சி மற்றும் விபுல் எம் . பன்சோலி அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது . அப்போது , ' ஓய்வு பெறுவதற்கு முன்பாக மனுதாரர் சிக்ஸர் அடிக்க துவங்கி இருக்கிறார் . இது துரதிருஷ்டவசமானது . இதற்கு மேலும் இது பற்றி விவரிக்க விரும்பவில்லை . ஓய்வு பெறும் முன் அடுத்தடுத்து நீதிமன்ற உத்தரவுகள் பிறப்பிக்கும் பழக்கம் நீதிபதிகளிடம் வளர்ந்து வருகிறது . இதை , ஒருபோதும் ஏற்க முடியாது' என , நீதிபதிகள் தெரிவித்தனர்


மாவட்ட நீதிபதி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விபின் சாங்கி , " பதவி காலத்தில் சிறப்பாக சேவை செய்திருக்கிறார் . ஆண்டு ரகசிய அறிக்கையில் , அவருக்கு நன்மதிப்புகள் கிடைத்துள்ளன . நீதிமன்ற உத்தரவுகளை பிறப்பித்த காரணத்திற்காக அவரை எப்படி பணியிடை நீக்கம் செய்யலாம் . நீதிமன்ற உத்தரவு பிறப்பித்ததால் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடியாது , " என வாதிட்டார்


இதை தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு : மத்திய பிரதேச நீதிபதிகளின் ஓய்வு வயதை , அறுபதில் இருந்து அறுபத்து ஒன்று ஆகஸ்ட் உயர்த்தகோரி , நவ . , இருபதாம் தேதி அம்மாநில அரசிடம் , உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது . இதனால் , நவ . , முப்பதாம் தேதி ஓய்வு பெற வேண்டிய அந்த நீதிபதியின் பதவிக்காலம் , இரண்டாயிரத்து இருபத்து ஆறு நவம்பர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது . இதை கூட அறியாமல் , அவர் ஓய்வு பெறும் முன் அடுத்தடுத்த உத்தரவுகளை பிறப்பித்து இருக்கிறார் . தவிர , இடைநீக்கத்திற்கான காரணத்தை அறிய தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனு தாக்கல் செய்துள்ளார் . ஒரு மூத்த நீதிபதியிடம் இப்படியொரு அணுகுமுறையை நாங்கள் எதிர்பார்க்கவில்லை


அதற்கு பதிலாக உயர் நீதிமன்றத்தில் நேரடியாக அவர் மனு தாக்கல் செய்திருக்கலாம் . தவிர , உயர் நீதிமன்றத்தை அணுகாமல் , நேரடியாக உச்ச நீதிமன்றத்தை அணுகியதும் ஏற்புடையதல்ல . நீதிபதியை இடைநீக்கம் செய்யும் முடிவை , உயர் நீதிமன்றத்தின் முழு அமர்வு எடுத்திருந்தால் கூட , பல வழக்குகளில் அந்த முடிவு புறந்தள்ளப்பட்டிருக்கிறது . ஆகவே , மனுதாரர் உயர் நீதிமன்றத்தை அணுகி , நிவாரணம் பெற்றுக்கொள்ள அனுமதிக்கிறோம் . இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்


மேலும் , மத்திய பிரதேச மாவட்ட நீதிபதியின் மனுவை பரிசீலித்து நான்கு வாரங்களில் முடிவெடுக்க வேண்டும் எனவும் , அம்மாநில உயர் நீதிமன்றத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%