உலக அளவிலான ஊக்கமருந்து சோதனை தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இந்தியா முதலிடம்

உலக அளவிலான ஊக்கமருந்து சோதனை தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இந்தியா முதலிடம்



உலக அளவில் ஊக்க மருந்து சோதனையில் சிக்கும் வீரர் - வீராங்கனைகளின் பட்டி யலில் இந்தியா தொடர்ந்து மூன்றா வது ஆண்டாக முதலிடம் பிடித்து மோசமான சாதனையை படைத்துள்ளது. உலக ஊக்கமருந்து எதிர்ப்பு முகமை (WADA) டிச., 16 அன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், விளையாட்டில் ஊக்கமருந்து பயன் படுத்தும் நாடுகளின் உலகளாவிய தர வரிசையில் இந்தியா தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக முதலிடம் பிடித்துள்ளது. இது அந்நாட்டுக்கு கிடைத்துள்ள ஒரு அவமரியாதை யான ‘ஹாட்ரிக்’ சாதனையாகக் கரு தப்படுகிறது. இந்தியாவின் தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு முகமை (NADA) 2024-ஆம் ஆண்டில் 7,113 சிறுநீர் மற்றும் ரத்த மாதிரிகளைச் சேகரித்தது. இதில் 260 மாதிரிகள் ஊக்கமருந்து பயன்படுத்தியதை உறுதிப்படுத்தும் ‘பாசிட்டிவ்’ முடிவு களைப் பெற்றுள்ளது. இது இந்தி யாவிற்கு பெரிய பின்னடைவாகும். 2030 காமன்வெல்த் போட்டிகளை நடத்தத் தயாராகி வரும் இந்தியா, அதன் தொடர்ச்சியாக 2036 ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் லட்சியத்தை கொண்டுள்ளது. இத்தகைய சூழ்நி லையில் ஊக்கமருந்து அறிக்கை கவ லையை ஏற்படுத்தியுள்ளது. அதிக பட்சமாக தடகளத்தில் 76 வழக்கு கள் பதிவாகியுள்ளன. அதற்கு அடுத்த படியாக பளுதூக்குதல் (43) மற்றும் மல்யுத்தம் (29) ஆகிய பிரிவுகளில் அதிகளவிலான ஊக்கமருந்து வழக்குகள் பதிவாகின. 2022 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளிலும் இந்தியா ஊக்கமருந்து விதிமீறலில் முத லிடத்தையே பிடித்திருந்தது. இந்தியா வை தொடர்ந்து 91 பாசிட்டிவ் வழக்கு களுடன் பிரான்ஸ் இரண்டாவது இடத்திலும், 85 வழக்குகளுடன் இத்தாலி மூன்றாவது இடத்தி லும் உள்ளன. ரஷ்யா மற்றும் அமெரிக்கா தலா 76 வழக்குகளுடன் 4 மற்றும் 5ஆவது இடங்களிலும், ஜெர்மனி (54), சீனா (43) 6, 7 ஆவது இடங்களிலும் உள்ளன என அதில் கூறப்பட்டுள்ளது. நாடா மழுப்பல் இதுதொடர்பாக நாட்டின் தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு முகமை (நாடா - NADA) வெளியிட்டுள்ள அறிக் கையில், “சமீபத்திய ஆண்டுகளில், இந்தியாவின் ஊக்கமருந்து எதிர்ப்பு கட்டமைப்பு கணிசமாக வலுப்படுத்தப் பட்டுள்ளது. விளையாட்டில் ஊக்க மருந்து அச்சுறுத்தலைச் சமாளிக்க, சோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், கல்வி மற்றும் விழிப்புணர்வுக்கும் அதிக முக்கியத்துவம் அளித்து வரு கிறோம். இதனால் இந்தியா மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது” என மழுப்ப லாக கூறியது. 


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%