பெரியப்பாவின் பெட்டி

பெரியப்பாவின் பெட்டி

🏵️🏵️


என் பெரியப்பா விடம் ஒரு பெட்டியிருந்தது. 

கருப்பு தங்கத்தினால் ஆனது; 

நம்பிவிட்டோம்!

வினா ஒன்றும் வைக்கவில்லை.

பெட்டியோரம் முழுவதும் நகாசு வேலை.

 அவ்வளவும் சொக்கத் தங்கம் என்பார்.

அவர் வார்த்தை; அனைத்தும் உண்மைதான்; என்றே நினைத்தேன்!

நாங்கள் எவரும் அதைத் திறக்கலாகாது! 

தொட்டுப் பார்க்க ஆசை!

என் கனவிலும் நினைவிலும்  

அடிக்கடி உலா வரும்;

அந்தப் பெட்டி!

பட்டுத் துணியால் மூடியிருப்பார்.

பட்டுத்துணியா?


' பெரியம்மா! உள்ளே என்ன இருக்கு?'

அவரின் நமட்டு சிரிப்புதான் பதில்.

வருடங்கள் போக;

கருப்புப் பெட்டியும

நினைவிலிருந்து போனது.


நேற்று கனவில் வந்தது; 

அந்த கருப்பு தந்தப் பெட்டி!

புலர் காலைப் பொழுது; செல்பேசி ஒலி!

அண்ணன் கேட்டான்

' உனக்கு பெரியப்பாவின் பெட்டி வேண்டுமா?'


'கரும் தந்தம் பெட்டியா? உனக்கு வேண்டாமா?


எங்கள் எவருக்கும் அது வேண்டாம்; உனக்கும் வேண்டாமா? விலைக்குப் போடலாமா? உடனே சொல்'

 'எடுத்து வை; எனக்கு வேண்டும்;

நான் எடுத்துக் கொள்கிறேன்.'


அதனுள் எப்படி இருக்கும்?

நான் என்ன வைக்கப் போகிறேன்; அதனுள்?

ஏனோ மனதில் பெரியம்மாவின் நமட்டுச் சிரிப்பு வந்து போனது.


அதை ஒரு முறையாவது தொட்டுப் பார்க்கணும்!

திறந்து பார்க்கணும்!



சசிகலா விஸ்வநாதன்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%