வெனிசுலாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதால் ரூ.27,000 கோடி மிச்சமாகும்: எஸ்பிஐ ஆய்வறிக்கையில் தகவல்
மும்பை: ரஷ்யாவுக்கு பதிலாக வெனிசுலாவிலிருந்து கச்சா எண்ணெய் வாங்க இந்தியா ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படும் நிலையில், அதனால் ரூ.27,000 கோடி வரை அதாவது 300 கோடி டாலர் வரை சேமிக்க முடியும் என எஸ்பிஐ ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் இந்தியாவுக்கு பல ஆதாயங்கள் கிடைக்கும் நிலையில் அதில் முக்கியமாக வெனிசுலா கச்சா எண்ணெய் மூலமாக கிடைக்கும் ஆதாயம் முதலிடத்தில் உள்ளது. இதன் மூலம், இந்தியா ஆண்டுக்கு 300 கோடி டாலரை மிச்சப்படுத்த முடியும்.
ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் பெறுவதைக் குறைத்து, வெனிசுலாவிலிருந்து ‘மெரி 16' வகை கனரக கச்சா எண்ணெயை இறக்குமதி செய்வதன் மூலம் இந்தியா இந்தச் சேமிப்பை செய்வது சாத்தியமாகும்.
20 டாலர் தள்ளுபடி: வெனிசுலா எண்ணெய்க்கு ஒரு பேரலுக்கு 10 முதல் 12 டாலர் வரை தள்ளுபடி கிடைக்க வாய்ப்புள்ளது. இது உள்நாட்டுப் பணவீக்கத்தைப் பாதிக்காமல், ரஷ்ய எண்ணெய் தள்ளுபடி நிறுத்தப்படுவதால் ஏற்படும் இழப்பையும் ஈடுசெய்ய உதவும்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?